அவசரகால தொலைபேசி எண்கள்....முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
விவசாயிகளுக்கான பல்வேறு அறிவிப்புகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொடர்ந்து உலகிற்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது. உலகளவில் 1.3 மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். 74 ஆயிரம் 441 பேர் இறந்துள்ளனர். சூப்பர் சக்தி அமெரிக்காவில் பயங்கரமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இங்கு 1150 பேர் இறந்துள்ளனர். இங்கே, இந்தியாவில் பூட்டப்பட்ட போதிலும், நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. நாட்டில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 4281 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 704 புதிய கொரோனா தொற்று வழக்குகள் உள்ளன, இதுவரை இந்த நோய் 111 பேரைக் கொன்றது.
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பல்வேறு தொழில்கள் முடங்கி உள்ளன. அத்தியாவசிய தேவைகளுக்கு எந்த தடையும் இல்லை. எனினும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு சலுகைகள் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
காய்கறிகள் மற்றும் பழங்களை குளிர்பதன கிடங்குகளில் பாதுகாப்பதற்கான பயன்பாட்டு கட்டணம் ஏப்ரல் 30 வரை வசூலிக்கப்படாது.
காய்கறிகள் மற்றும் பழங்கள் சேகரித்து விநியோகம் செய்ய முன்வரும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். வியாபாரிகள் சந்தை கட்டணத்தை வரும் 30ம் தேதி வரை செலுத்த வேண்டியதில்லை. காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்ய 500 நடமாடும் வாகனங்கள் ஏற்படுத்தப்படும்.
விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை விற்பனை செய்வதில் உதவிட அவசரகால தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வியாபாரிகளை தொடர்பு கொள்ளுதல், சரக்கு போக்குவரத்து அனுமதி, குளிர்சாதன கிடங்கு போன்ற சேவைகளுக்கு இந்த எண்களில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம். விவசாயிகள் 044-22253884, 22253883, 22253496, 95000 91904 என்ற எண்களை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.