சென்னை: மறைந்த முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரையின் (CN Annadurai) பேத்தி, ப்ருத்திகா ராணி, UPSC தேர்வில் தனது முதல் முயற்சியிலேயே 171 வது இடத்தைப் பெற்றுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தனது நெருங்கிய தோழி தயாராகி வருவதைக் கண்டபோது, அவரது பாட புத்தகங்களை அவர் வாங்கிப் படித்துப் பார்த்தார். அவை அனைத்தும் அவருக்கு மிகவும் பிடித்துப் போகவே தானும் அதில் சேர வேண்டும் என விருப்பம் கொண்டார். 2019 ஆம் ஆண்டில், அவர் தேர்வை எழுதி தனது முதல் முயற்சியிலேயே 171 வது இடத்தைப் பெற்றார். யுபிஎஸ்சி முடிவுகள் இந்த வார தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

“எனது முதல் விருப்பம் IFS. எனக்கு எப்போதும் இந்தியாவின் சர்வதேச உறவுகள் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் ஆர்வம் இருந்துள்ளது. நான் ஐ.நா. அல்லது உலக சுகாதார அமைப்பில் பணியாற்ற விரும்புகிறேன்” என்று 23 வயதான ப்ருத்திகா ராணி (Prithika Rani) கூறினார்.


சிவில் சர்வீஸ் பணிகளுக்கு சேவை மனப்பான்மையும் அர்ப்பணிப்பும் அதிகமாகத் தேவைப்படுகிறது. இதில் தொழில் ரீதியான பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் இவை அனைத்தையும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார் ப்ருத்திகா ராணி.


ALSO READ: சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு; தமிழக மாணவர் தேசிய அளவில் 7ஆவது இடம்..!


“எனது பணியின் தாக்கம் அடிமட்ட மட்டத்தில் உள்ளவர்களுகக்கு நேரடியாக இருக்காது என்றாலும், கொள்கைகளில் பெரும்பாலானவை உலகளாவிய கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கும். முழுமையான மற்றும் நன்மை பயக்கும் கொள்கைகளை உருவாக்க சர்வதேச மேடையில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த விரும்புகிறேன்” என்று கூறுகிறார் SSN பொறியியல் கல்லூரியின் மின் பொறியியல் பட்டதாரியான ப்ருத்திகா  ராணி.


அவரது தாத்தா அண்ணாதுரை, அவர் பிறப்பதற்கு முன்பே காலமாகிவிட்டார்.  ஆனால் பிருத்திகா அவரது சேவையைத் தன்னால் தொடர முடியும் என நம்புகிறார். “எனது தாத்தாவின் மரபை பற்றி நான் ஒருபோதும் ஒரு சுமையாக நினைத்ததில்லை. அவரைப் பற்றியும் அவர் ஆற்றியுள்ள சேவைகள் மற்றும் பணிகள் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஏனென்றால் அவர் ஏழைகளுக்காகவும் பிற்படுத்தப் பட்டவர்களுக்காகவும் உழைத்தார். எனினும் அவரது நிழலில் குளிர் காய்வதை விட, எனக்காக ஒரு அடையாளத்தை உருவாக்க விரும்புகிறேன்” என்று அவர் கூறினார். உலக அளவில் பெண்களின் உரிமைகள், சுகாதாரம் மற்றும் ஆரம்பக் கல்விக்காக பணியாற்றுவதில் ப்ரிதிகா ஆர்வம் காட்டுகிறார்.


10 ஆம் வகுப்பு முதல் ஒரு டென்னிஸ் வீரராக இருக்கும் ப்ரிதிகா, ரோஜர் பெடரரின் மிகப்பெரிய ரசிகர். மேலும் இந்த விளையாட்டு தனக்கு பல விஷயங்களை கற்பித்ததாக அவர் கூறுகிறார். “நான் நீண்ட காலமாக டென்னிஸ் விளையாடியுள்ளேன். டென்னிஸ் உங்களுக்கு சகிப்புத்தன்மை, உடல் மற்றும் மனதை கட்டுக்குள் வைக்க கற்றுக்கொடுக்கிறது” என்று அவர் கூறினார்.