பெட்ரோல் டீசலுக்கு மாற்று


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலையை கருத்தில் கொண்டு வாகன உரிமையாளர்கள் புதிய தொழில்நுட்பங்களுக்கு மாறி வருகின்றனர். ஏற்கனவே மின்சார வாகனங்கள் பயன்பாடு மத்திய மாநில அரசுகள் சார்பில் ஊக்குவிக்கப்பட்டு வரும் நிலையில், சிஎன்ஜி மீத்தேன் கேஸ் மூலம் பேருந்து மற்றும் லாரிகள் இயக்குவதும் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் எரிபொருள் தேவை குறைவதுடன் பொருளாதார ரீதியாகவும் லாபமாக இருப்பதாக வாகன உரிமையாளர்கள் கூறுகின்றனர். 


சிஎன்ஜியில் அரசுப் பேருந்து


இதனையொட்டி தர்மபுரியில் முதன்முறையாக இரண்டு பேருந்துகள் சிஎன்ஜி சிலிண்டர்கள் மூலம் இயக்கப்படுவது மாவட்ட ஆட்சியரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மீத்தேன் கேஸ் நிரப்பப்பட்ட அந்த பேருந்துகள் சேலம் மற்றும் தர்மபுரி இடையே இயக்கப்படுகின்றன. மீத்தேன் வாயு ஒரு கிலோ 80 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக பேருந்து இயக்கும் பொழுது ஒரு கிலோ மீத்தேன் வாயுவில் ஆறு கிலோமீட்டர் வரை பேருந்து இயக்கலாம். ஒரு லிட்டர்  டீசலில் நான்கரை கிலோமீட்டர் மட்டுமே பேருந்து இயக்க முடியும். டீசல் விலை ஒரு லிட்டர் 95 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


மேலும் படிக்க | Kamal Haasan: நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? கமல்ஹாசன் ஆலோசனை


எரிபொருள் செலவு மிச்சம் 


இதன் காரணமாக மீத்தேன் வாயுவால் இயக்கப்படும் பேருந்துகளில் எரிபொருள் செலவு குறைந்து, வருவாய் அதிகரிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு தனியார் பேருந்து மற்றும் லாரி ஓட்டுநர்கள் மீத்தேன் மூலம் பேருந்து மற்றும் கனரக வாகனங்களை இயக்குவதற்கு மாறிக் கொண்டிருக்கின்றனர். டீசலில் செல்லக்கூடிய பேருந்துகளை சுமார் நான்கு முதல் ஆறு லட்ச ரூபாய் செலவில் மீத்தேன் மூலம் இயங்கும் பேருந்துகளாக சேலம் பகுதியில் மாற்றி தருகின்றனர். மத்திய அரசு அனுமதித்த அளவில் இந்த பேருந்துகள் மாற்றியமைப்பதால் சுற்றுச்சூழலுக்கு எந்த வித கேடும் இல்லாமல் இயக்கப்படுகிறது. எரிவாயு மூலம் இயக்கப்படுவதால் மாதம் ஒன்றுக்கு 80 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் வருவாய் கிடைப்பதாகவும், பேருந்துக்கான எரிபொருள் செலவு குறைவதாகவும் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க | மெரினாவில் பேனா நினைவு சின்னம்! அனுமதி வழங்கியது மத்திய அரசு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ