கோவை திமுக மேயர் திடீர் ராஜினாமா? அடுக்கடுக்காக தலைமைக்கு சென்ற புகார் பின்னணி
கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என்ற சிறப்புடன் பதவி வகித்து வந்த கல்பனா, திடீரென ராஜினாமா கடிதத்தை வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்.
தமிழகத்தில் சென்னையை அடுத்து பெரிய மாநகராட்சியாக விளங்குவது கோவை மாநகராட்சி. இந்த மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளது. 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 வார்டுகளில் 96 வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. 3 பேர் மட்டும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள். 19வது வார்டு கவுன்சிலரான கல்பனா மேயராக தேர்வு செய்யப்பட்டார். கோவை மாநகராட்சியின் ஆறாவது மேயர் மற்றும் முதல் பெண் மேயர் என்ற பெருமையை கல்பனா பெற்றார்.
கடந்த சில மாதங்களாக திமுக கவுன்சிலர்களே மேயர் கல்பனா மீது அதிருப்தி தெரிவித்து வந்தனர். தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்களுடனும், அதிகாரிகளுடனும் மோதல் போக்கை கடைபிடித்து வந்ததால் தலைமைக்கு அடுத்தடுத்து புகார்கள் சென்றதாக கூறப்படுகிறது. மேயர் கல்பனாவின் நடவடிக்கைகளால் அமைச்சர் கே.என்.நேரு, கோவை பொறுப்பு அமைச்சர் முத்துசாமி ஆகியோர் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்பட்டது. திமுக தலைமை இதுகுறித்து விசாரித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கோவை மேயர் கல்பனா இன்று ராஜினாமா கடிதம் அளித்துள்ளார். ஆளுங்கட்சியை சேர்ந்த மேயர் திடீரென பதவி விலகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான கல்பனா ஆனந்தகுமார், மணியக்காரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர். கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார். அப்பகுதி திமுக பொறுப்பாளராக உள்ளார். கல்பனா ஆனந்தகுமார், அப்பகுதியில் இ -சேவை மையம் நடத்தி வந்தார்.
இதனையடுத்து சில கவுன்சிலர்கள் மேயர் பதவியை கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கில் தி.மு.க. மூத்த தலைவர்கள் பலரை இப்போதே தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். இதற்காக பலர் சென்னைக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். செந்தில் பாலாஜியின் ஆதரவாளராக இருந்த கல்பனா ராஜினாமா செய்திருப்பது கோவை திமுக வட்டாரத்தில் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | கோயம்புத்தூர் மக்களே கொண்டாட்டத்திற்கு தயராகுங்கள்.. இதோ கோவை விழா 2024
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ