கோவை:  கோவை வேலாண்டிபாளையம் பகுதியை  சேர்ந்த உமா மகேஸ் சுபா தம்பதியினர் ஜீரா மற்றும் ஐரிஸ் என்கிற ப்ரிஸியன் வகை பெண் பூனைகளை நீண்ட நாட்களாக வளர்த்து வருகின்றனர்.  இந்நிலையில் திடீரென்று பெண் பூனைகளான ஜீரா மற்றும் ஐரிஸ்க்கு வயிறு பெரிதானது.  இதனையடுத்து பூனைகளின் உரிமையாளர்கள் அவற்றை கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்று காமித்தனர்.  அந்த பூனைகளை பரிசோதித்ததில் அவை கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது, அதன் பின்னர் பூனையின் உரிமையாளரிடம் ஜீரா மற்றும் ஐரிஸ் பூனைகள் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.  இந்த செய்தியினை கேட்டு மகிழ்ந்தவர்கள், மனிதர்களுக்கு வளைகாப்பு செய்வது போல் தங்களது பூனைகளுக்கும் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று திட்டமிட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



அதன்படி அதற்கான ஏற்பாடுகளை செய்தவர்கள் ஆர்.எஸ்.புரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் செல்லப்பிராணி நிலையத்தில் வைத்து அந்த இரு பூனைகளுக்கு வளைகாப்பு நடத்தினர்.  அந்த பூனைகளுக்கு கறுப்பு மற்றும் வெள்ளை நிற வளையல்கள் அணிவித்து, தேன்மிட்டாய், கடலை மிட்டாய், பழங்கள், பிஸ்கட்டுகள் வைத்து கோலாகலமாக வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.  மேலும் பூனைகளுக்கென்று பிரத்யேகமாக ஆடைகளையும் தயாரித்து அதனையும் அணிவித்து, பூனைகளுக்கு கழுத்தில் மணி கட்டி வளைகாப்பு நடத்தி முடித்தனர். 


 



இதுபோன்று பூனைக்கு வளைகாப்பு நடத்தும் நிகழ்ச்சியை பார்ப்பது இதுவே முதன்முறை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.  இதுகுறித்து பூனையின் உரிமையாளர்கள் கூறுகையில், "மனிதர்களுக்கு எவ்வாறு வளைகாப்பு நடத்தப்படுகிறதோ, அதேபோல கர்ப்பமாக இருக்கும் எங்கள் செல்லப்பிராணிகளை நாங்கள் வளைகாப்பு நடத்த திட்டமிட்டோம்.  அதன்படி மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவர்கள் முன்னிலையில் வளைகாப்பு நடத்தினோம்" என்று கூறியுள்ளனர்.  இதற்கு முன்னர் ஒரு சிலர் தாங்கள் வளர்க்கும் நாய்க்கு 5 வகை உணவு தயார் செய்து, வளையல் அணிவித்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி ட்ரெண்ட் செய்த நிலையில், தற்போது பூனைக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய சம்பவம் ட்ரெண்டாகி வருகிறது.


ALSO READ | ஜலக்கீரிடை செய்யும் பாம்புகளின் வைரல் வீடியோ; வாயை பிளந்த நெட்டிசன்ஸ்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR