கோவை: இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்ள சித்தரவதை செய்த கணவர்..! தப்பித்த பெண் பகீர் புகார்
கோவையை சேர்ந்த இளம் பெண் ஒருவர், தன் கணவர் வயாகரா சாப்பிட்டு உடலுறவு கொள்ளும்போது சித்தரவதை செய்வதாகவும், இயற்கைக்கு மாறான வகையில் உடலுறவு கொள்ள வற்புறுத்துவதுடன், தன் ஆபாச படத்தை நண்பர்களுக்கு காட்டி அவர்களுடனும் உடலுறவு கொள்ள துன்புறுத்துவதாகவும் அளித்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பி.டெக் படித்த இளம் பெண் தன் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அளித்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 25 வயதான இளம் பெண், கணவர் வயாகரா மற்றும் கஞ்சா சாப்பிட்டு எப்போதும் தன்னுடன் உடலுறவு கொள்வதாக தெரிவித்துள்ளார். அத்துடன், அப்போது ஆபாச படங்களை பார்த்து இயற்கைக்கு மாறான வகையில் உடலுறவு வைத்து தன்னை சித்திரவதை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இதுமட்டுமல்லாமல், தன்னை ஆபாசமாக புகைப்படமும் வீடியோக்களும் எடுத்து அதனை நண்பர்களுக்கும் காட்டி, அவர்களுடனும் உறவு வைத்துக் கொள்ள வற்புறுத்திகிறாராம் கணவர்.
இதை அனைத்தும் தெரிந்திருந்த இளம் பெண்ணின் மாமியார் மற்றும் மாமனார், கணவரின் அத்தை உள்ளிட்டோர் மகனுக்கு உடந்தையாக இருப்பதாகவும் அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், திருமணத்திற்கு பிறகே கணவர் கஞ்சாவுக்கு அடிமையானவர் என்பது இளம் பெண்ணுக்கு தெரியவந்திருக்கிறது. கஞ்சா இல்லாமல் இளம் பெண்ணின் கணவரால் ஒருநாள் கூட உடலுறவு கொள்ள முடியவில்லையாம். நாள்தோறும் இத்தகைய சித்திரவதைகளை எதிர்கொண்ட அந்த இளம் பெண், அங்கிருந்து தப்பித்து வந்து கோவை மாநகர கிழக்கு காவல்துறையில் கடந்த ஆண்டு புகார் அளித்திருக்கிறார். ஆனால், கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு உள்ளிட்டவற்றை காரணம் காட்டி காவல்துறை வழக்கு பதிவு செய்யவில்லையாம்.
மேலும், காவல்துறையினர் கணவருடன் சமரசமாக செல்லுமாறு அறிவுறுத்தியதுடன், உடலுறவு கொள்ள வற்புறுத்திய நண்பர்கள் மீதும் புகாரை பதிவு செய்யவில்லையாம். காவல்துறையின் இத்தகைய நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த பட்டதாரி இளம் பெண், கோவை மாநகர காவல் ஆணையகரகத்தில் புகார் கொடுத்திருக்கிறார். இதனையடுத்து இந்த விசாரணை அதிகாரி மாற்றப்பட்டு வேறு ஒருவர் இந்த வழக்கை விசாரித்து வருகிறார். இருப்பினும், கணவரிடம் இருக்கும் தன்னுடைய ஆபாச படங்களை அழிப்பதற்கு கூட காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கும் பாதிக்கப்பட்ட பெண், காவல்துறையின் மெத்தனமாக இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கோவை மகிளா நீதிமன்றத்தில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவலில், வரும் 10 ஆம் தேதிக்குள் இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகவும், குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரை தவிர மற்ற அனைவரும் ஏற்கனவே முன் ஜாமீன் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை துரிதமாக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | பீகார் தொழிலாளர்கள் தாக்குதல்? - புரளிக்கு முற்றுப்புள்ளி... பட்டியல் போட்ட ஸ்டாலின்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ