கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் ஆறுதல் கூறினார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாதம் 25 ஆம் தேதி மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போனார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் தடாகம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீசாரும் உறவினர்களும் குழந்தையை தேடி வந்தனர். இரவு முழுவதும் குழந்தை கிடைக்காத நிலையில்,  26 ஆம் தேதி காலையில் சிறுமி காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.


மீட்கப்பட்ட சிறுமியின் உடலை காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது உறுதியானது. இந்த சம்பவம் தமிழகம் முழுவது பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. 


இந்நிலையில், இது தொடர்பாக உளியம்பாளையத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவனை போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து, நீலகிரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ. ராசாவை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சிறுமியின் வீட்டுக்கு நேரில் சென்று உறவினருக்கு ஆறுதல் கூறினார். சிறுமியின் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.