என்ன கொடும சார் இது: வகுப்பறையிலே சரக்கடித்த மாணவிகள், இணையத்தில் வீடியோ வைரல்
மாணவிகள் தங்களது வகுப்பறையிலே அவர்களது மேஜையிலேயே வெளிமாநிலத்தில் விற்கப்படும் பாக்கெட் மதுவையை குளிர்பானத்தில் கலந்து அருந்தும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது.
கொரோனா பெருந்தொற்று நோய் பரவல் காரணமாக கடந்த இரு வருடங்களாக பள்ளிக் கல்லூரிகள் இயக்கப்படாத நிலையில் தற்போது நோய் பரவல் குறைந்த காரணத்தால் கட்டுப்பாடுகள் அனைத்தும் திரும்பபெற்று இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறோம். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாகவே பள்ளி மாணவிகள்மற்றும் கல்லூரி மாணவிகள் பேருந்துகள் மற்றும் பல்வேறு இடங்களில் மது அருந்தும் காட்சியானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தற்போது காஞ்சிபுரம் அடுத்துள்ள ஏனாத்தூரில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிபிஏ முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் தங்களது வகுப்பறையிலே அவர்களது மேஜையில் வெளிமாநிலத்தில் விற்கப்படும் பாக்கெட் மதுவையை குளிர்பானத்தில் கலந்து அருந்தியுள்ளனர்.
கல்லூரி மாணவி ஒருவர் அவ்வாறு குளிர்பானத்தில் மதுவை கலந்து அருந்துவதை உடன் பயிலும் சக மாணவிகளே வீடியோ எடுத்துள்ள நிலையில் தற்போது அக்காட்சியானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்த தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பல்வேறு பகுதியிலிருந்து வந்து பயின்று வருகின்றனர். காஞ்சிபுரத்தில் மிகப் பிரபலமான கல்லூரியாக இந்த கல்லூரி விளங்குவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் இந்த வீடியோ குறித்து சம்பந்தப்பட்ட கல்லூரியின் முதல்வர் வெங்கடேசன் கவனத்திற்கு சென்றது. இந்த வீடியோவில் தவறு செய்த கல்லூரி மாணவிகளிடம் கல்லூரி-யின் முதல்வர் விசாரணை செய்ததில் அதே வகுப்பறையில் படிக்கும் மாணவன் ஒருவன் மதுபானத்தை வாங்கி வந்ததாகவும், மது என்று தெரிந்தே குளிர்பானத்தில் கலந்து அருந்தியதாகவும் கல்லூரியில் மாணவிகள் ஒப்புக்கொண்டனர்.
அதையடுத்து பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவ மாணவிகளின் பெற்றோர்களை அழைத்து ஒரு மாணவன் உட்பட 5 மாணவிகளை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்தது. மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி இனி இது போல் நடைபெறாமல் இருப்பதாக உறுதி அளித்ததன் பேரில் தற்காலிகமாக அவர்களை சஸ்பெண்ட் செய்து கல்லூரி முதல்வர் வெங்கடேசன் உத்தரவிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் மாணவிகளே மதுவை அருந்துவது குறித்த வீடியோ சமீபகாலமாக வைரலாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு தரப்புகளில் இருந்து மாணவிகளுக்கு எதிரான கருத்துக்களும் முன் வைக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR