கன்னியாகுமரி மாவட்டம் தொலையாவட்டம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கலை கல்லூரியில்  மாணவ மாணவியர் திறமைகளை முன்னேற்ற நடந்த கலந்துரையாடலில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர் மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடிய போது மாணவிகள் பலவகையான கேள்விகளை எழுப்பினர்.


அப்போது கேள்வி எழுப்பிய மாணவி ஒருவர் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா? மது காரணமாக பல குடும்பங்கள் சீர்குலைந்து உள்ளன, மேலும் காவல்துறையினரே மது பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர், ஆகையால் மது விற்பனை நிறுத்தபடுமா? என கேள்வி எழுப்பினார்.


மேலும் படிக்க | குழந்தையின் மூளை ஜெட் வேகத்தில் இயங்க வேண்டுமா; இந்த ‘6’ உணவுகளை கொடுக்கவும்


அதற்கு பதில் அளித்த கனிமொழி எம்பி, "திமுக தேர்தல் வாக்குறுதியில் மது ஒழிப்பு என்று எதுவும் கூறவில்லை. ஆகையால் மதுக்கடைகளை மூடுவது என்பது இயலாதாது. அதற்கு பதிலாக கடைகள் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என அதிர்ச்சி பதில் அளித்தார். 


தொடர்ந்து கேள்வி எழுப்பிய மாணவி, மதுவிலக்கு காவல்துறையினரே மதுக்கடைகளில் இருந்து பறிமுதல் செய்து கொண்டு வரும் மது பாட்டில்களை எடுத்து வந்து பயன்படுத்துகின்றனர் என்றும், மது கடைகளில் காவல்துறையினருக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்ற சட்டம் வருமா? என்றும் கேள்வி எழுப்பினார்.


அப்போது பேசிய கனிமொழி, "மதுக்கடைகளில் தொழில்ரீதியாக பார்த்து யாருக்கும் மது வழங்குவது இல்லை. வயது பார்த்து மட்டுமே வழங்கப்பட்டு வரருகிறது. அதனால் காவல்துறையினர் என்று தனியாக தரம்பிரித்து மது வழங்காமல் இருக்க முடியாது." என்று தெரிவித்தார்.


மேலும், "அதே நேரத்தில் பணியில் இருக்கும் காவலர்கள் மது அருந்தி வந்தால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.


இதனையடுத்து நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது செய்தியாளர்கள் தொடர் மின்வெட்டு மற்றும் மது ஒழிப்பு குறித்து கேள்வி எழுப்பியதை தொடர்ந்து பதில் அளிக்காமல் கனிமொழி எம்பி கிளம்பி சென்றார்.


மேலும் படிக்க | பரோட்டா பிரியர்களுக்கு ஒரு பகீர் தகவல்! மைதா எலும்புகளை பலவீனமாக்கும்; எச்சரிக்கை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR