ரயில்வே கோட்ட கட்டுப்பாட்டு அலுவலர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்கள் இடையே ஆங்கிலம் மற்றும் இந்தியில்தான் தகவல் பரிமாற்றம் இருக்க வேண்டும் என தெற்கு ரயில்வே சுற்றறிக்கை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை: தகவல் பரிமாற்றம் யாரேனும் ஒருவருக்கு புரியாமல் போவதை தவிர்க்க தமிழகத்தில் ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் மாநில மொழியில் (தமிழில்) இருக்க வேண்டாம். ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் தகவல்களை பரிமாற தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. 


ரயில்வே கோட்ட கட்டுப்பாட்டு அலுவலர், ஸ்டேஷன் மாஸ்டர் இடையே உள்ள அலுவலக தகவல் பரிமாற்றம் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் இருக்க வேண்டும் என தெற்கு ரயில்வே சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. பிராந்திய மொழிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் கட்டுப்பாட்டு அலுவலர்கள் ரயில் நிலைய மேலாளர்களிடையே சரியான புரிதல் ஏற்பட வேண்டும் என்பதற்காக இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதாக ரயில்வேத்துறை விளக்கமளித்துள்ளது. 


கடந்த மே மாதம் மதுரை அருகே ஒரே பாதையில் இரண்டு ரயில்கள் எதிர் எதிரே பயணித்தது. பின் ரயில்வே அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு விபத்தை தடுத்தனர். இதற்கு காரணம் ரயில்வே ஊழியர்களிடையே ஏற்பட்ட மொழிப் பிரச்சனை என தெரிவிக்கப்பட்டது. இதன்காரணமாகவே தெற்கு ரயில்வே இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.