@malathyj1508 என்ற டிவிட்டர் ஐடியில் இஸ்லாமியர் ஒருவர் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசும் வீடியோ பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பேசும் மௌலானா காஸிமி என்ற நபர், இஸ்லாமிய முறைப்படி பெண்கள் மிகவும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார். இஸ்லாமிய நெறிமுறைகளைப் முறையாக பின்பற்றும் பெண்கள் நரகத்துக்கு போகமாட்டார்கள் எனக் கூறும் அவர், அந்த நெறிமுறைகளைப் முறையாக பின்பற்றுபவர் பேஸ்புக் (Facebook), இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களைப் பயன்படுத்தினால் அவர்களும் நகரத்துக்குப் போவார்கள் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | WhatsApp Web விரைவில் கைரேகை அங்கீகார அம்சத்தை அறிமுகப்படுத்தலாம்


பெண்களை சீரழிப்பதற்காக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் (Social Media) கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறும் அவர், பேஸ்புக் பயன்படுத்தும் பெண்கள் விபச்சாரிகள் என கீழ்த்தரமாக விமர்ச்சித்துள்ளார். இதுவரை பேஸ்புக் பயன்படுத்தும் பெண்கள் விபச்சாரிகளாக இருப்பார்கள் எனக் கூறியுள்ள மௌலானா, இனிமேல் புதிதாக பயன்படுத்த இருக்கும் பெண்களும் எதிர்காலத்தில் விபச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என விமர்சித்துள்ளார்.


இதற்காக பல்வேறு காரணங்களையும் அவர் பட்டியலிடுகிறார். அவரின் இந்த சர்ச்சைப் பேச்சு சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகியுள்ளது. பலரும் அவரின் பேச்சுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். பெண்கள் குறித்தும், சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் அவரது பேச்சு இருப்பதால், காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 


ALSO READ | Viral Video: இணையவாசிகளை உறைய வைக்கும் ராட்சஸ மலைப் பாம்பு..!!


இது குறித்து கருத்து பதிவிட்டுள்ள ஒரு சிலர், இதுபோன்ற கருத்துகள் வெளியிடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காததன் விளைவே, இப்படியான கருத்துகளை சமூக ஊடகங்களில் பேசுவதற்கான தைரியமாக மாறிவிடுவதாக தெரிவித்துள்ளனர். இதனால், இதுபோன்ற பேச்சுகளை பேசி சமூக ஊடகங்களில் பதிவிடுவோர் மீது காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள நெட்டிசன்கள், பிற்போக்குத்தனமாக கருத்துகளை பரப்புபவர்கள் யாராக இருந்தாலும் அதனை மக்கள் புறந்தள்ள வேண்டும் என கூறியுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR