கோவை சாய்பாபாகாலனி பகுதியில் இரு வாகனம் ஒன்றின் மேல் அதன் உரிமையாளர் அவரது ஹெல்மெட்டை வைத்து விட்டு அலுவலகத்திற்கு சென்று உள்ளார். பின்னர் அலுவலக வேலையை முடித்து விட்டு வந்து பார்க்கையில் ஹெல்மெட் காணாமல் போயுள்ளது. சிறிது நேரம் அக்கம், பக்கத்தில் விசாரித்த அவர், அது குறித்து எதுவும் தெரியவராததால் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி யில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | போலீசார் துப்பாக்கியை உபயோகிக்க தயங்க கூடாது... அறிவுறுத்தும் டிஜிபி சைலந்திரபாபு!


அப்போது, அவ்வழியாக வேறொரு இருசக்கர வாகனத்தில் வந்த HP நிறுவன சீருடை அணிந்த நபர். சிறிது நேரம் செல்போனை உபயோகிப்பதுபோல் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு யாரும் இல்லாத நேரத்தில் ஹெல்மெட்டை திருடி சென்றது பதிவாகி இருந்தது. தற்போது இந்த சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


மாநகர மற்றும் மாவட்ட காவல் துறையினர் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்படுவது குறித்து பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி சி.சி.டி.வி கேமராக்களை பல்வேறு இடங்களில் பொருத்தி வருகின்றனர். பொதுமக்கள் பலரும் சி.சி.டி.வி கேமராக்களை அவர்களது இல்லங்களில் அலுவலகங்களில் பொருத்தி வருவதால் இது போன்று குற்றச் சம்பங்கள் எளிதில் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.


மேலும் படிக்க | வெளுத்து வாங்கப்போகும் கனமழை...மக்களே உஷார்: வானிலை தகவல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ