COVID-19 Update: இன்று 1,359 பேர் கொரோனாவால் பாதிப்பு மற்றும் 20 பேர் உயிரிழப்பு
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 16 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.
சென்னை: இன்று தமிழ்நாட்டில் 1,359 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,75,592 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 169 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 20 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,754 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 16,379 ஆக உள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 16 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். இன்றைய எண்ணிக்கையுடன் இதுவரை கொரோனா தொற்றால் மொத்தமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,754 -ஐ எட்டியுள்ளது.
ALSO READ | அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பீதியில் பெற்றோர்
தமிழகத்தில் (Tamil Nadu) இன்று 1,473 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 26,23,459 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மொத்தமாக 1,43,355 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், 1,359 பேருக்கு தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 770 ஆண்களும் மற்றும் 589 பெண்களும் அடங்குவார்கள்.
ALSO READ | அடுத்த 3 மாதங்களுக்கு கவனம் தேவை: எச்சரிக்கும் சுகாதாரச் செயலர்
இன்றைய நிலவரம்:
• இன்றைய பாதிப்பு - 1,359
• இன்றைய மரணங்கள் -20
• மொத்த பாதிப்பு - 26,75,592
• இன்றைய டிஸ்சார்ஜ் - 1,473
• இன்றைய சோதனைகள் - 1,43,355
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR