Tamil Nadu COVID-19 Updates: ஏழு லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு; இன்று 3,077 பேருக்கு தொற்று
தமிழகத்தில் இன்று 3,077 பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா (Coronavirus) தொற்றால் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.
Coronavirus in Tamilnadu: தமிழகத்தில் இன்று 3,077 பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா (Coronavirus) தொற்றால் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் (COVID in Tamil Nadu) பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 7,00,193 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 10,825 ஆக உயர்ந்தது.
அதேநேரத்தில் இன்று 4,314 பேர் குணமடைந்து (Today's Discharged) வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 6,55,170 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். 34,198 பேர் மருத்துவமனை மற்றும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ALSO READ | அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்: தமிழக முதல்வர் கே.பழனிசாமி அறிவிப்பு
இன்று 81,259 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. இதுவரை தமிழகத்தில் 92,75,108* பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிலவரம்: 23-10-2020
கொரோனா பாதிப்பு - 3,077
சிகிச்சை பெற்று வருபவர்கள் - 34,198
பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள் - 81,259
குணமடைந்து வெளியேறியவர்கள் - 4,314
இறப்பு - 45
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR