சென்னை நசரத்பேட்டையை அடுத்த திருமழிசை பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி எபினேசர். 25 வயதாகும் இவர் மீது நசரத்பேட்டை, மாங்காடு ,பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, போன்ற குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் சொந்த வேலைக்காக திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் வரை சென்று விட்டு ஆட்டோவில் சென்னையை நோக்கி பேரம்பாக்கம் தண்டலம் நெடுஞ்சாலை வழியாக எபினேசர் வந்துள்ளார். அப்போது காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதிக்குள் வந்தபோது எதிர் திசையில் வந்த கார் ஒன்று இவர் வந்த ஆட்டோ மீது மோதியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஆளுநரின் கையெழுத்துக்காக காத்திருக்கும் 49 சிறைவாசிகளின் விடுதலை



இதையடுத்து காரில் இருந்து இறங்கிய மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை ஆட்டோவை நோக்கி வீசியது. பின்பு தான் தெரிந்தது இது எபினேசருக்கு போடப்பட்ட ஸ்கெட்ச் என்பது. பின்னர் சுதாரித்துக் கொண்ட எபினேசர் ஆட்டோவில் இருந்து இறங்கி ஓடிய போது அவரை விரட்டிச் சென்ற அந்த கும்பல் கத்தி, வீச்சருவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் மூலம் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையிலான போலீசார் படுகொலை செய்யப்பட்ட ரவுடியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் கொலை செய்துவிட்டு தப்பி சென்ற மர்மகும்பலை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.



ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்படும் தனியார் ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ஸ்கிராப் எனப்படும் இரும்பு கழிவுகளை ஒப்பந்தம் எடுப்பதில் அரசியல் பிரமுகர்கள், ரவுடிகள் இடையே தொழில் போட்டி ஏற்பட்டு தொடர்ந்து கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கொலை சம்பவங்களை தடுப்பதற்காக குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 100க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை போலீசார் சிறையில் அடைத்துள்ள நிலையில் மீண்டும் வெடிகுண்டு வீசி ரவுடி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் படிக்க | உதயநிதி அடித்த கிண்டலில் கடுப்பான சர்ச்சை சாமியாரின் ரியாக்ஷன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ