சென்னை தாம்பரம் அடுத்த திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் உதயா பள்ளிகரனையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று மாலை சிட்லபாக்கம் சேது நாராயணன் தெருவில் உதயா தனது தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் உதயா வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கள் மறைத்து வந்திருந்த அரிவாளாள் வெட்டினர். இதனால் தன்னை காப்பாற்றி கொள்வதற்காக அருகில் இருந்த குடியிருப்பு பகுதிக்கு சென்ற உதயாவை விரட்டி சென்றவர்கள் சரமாரியாக வெட்டினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால் அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள் உடனடியாக ரத்த வெள்ளத்தில் கிடந்த உதயாவை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயம் என்பதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபட்டு வந்தது.



இதற்கிடையே சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் சேலையூர் உதவி ஆணையர் கிறிஸ்டி ஜெயசீல் யிடம் சரண்டைந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மப்பேடு பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் வேலை பார்க்கும் நரேஷ் (24 வயது), மப்பேடு, புத்தூர் விரிவு பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வரும் கிருஷ்ணா (19 வயது) என்ற கல்லூரி மாணவர் மற்றும் பி.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வரும் சாந்தகுமார் என்பதும் தெரியவந்துள்ளது.


மேலும் படிக்க | தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி சிக்கிய விவகாரம்…. பாஜக பிரமுகர் வீட்டில் அதிரடி சோதனை


மேலும் நடத்தபட்ட விசாரணையில் உதயா மூன்று நாட்களுக்கு முன்பு வாகனம் நிறுத்துவதற்க்கு ஏற்பட்ட தகராறில் நரேசை தாக்கியதாகவும் இதற்கு பழி வாங்குவதற்காக தனது நண்பர் கல்லூரி மாணவர்களான கிருஷ்ணா மற்றும் சாந்தகுமார் ஆகியோருடன் சேர்ந்து கஞ்சா போதையில் உதயாவை நரேஷ் மற்றும் கிருஷ்ணா அரிவாளால் வெட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்


இதனையடுத்து இன்று காலை சிகிச்சை பெற்று வந்த உதயா சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை உயிரிழ்ந்தார். மூவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


மேலும் படிக்க | ராமஜெயம் கொலையாளிகளுக்கு ஜெயக்குமார் கொலையில் தொடர்பு? ஷாக்கிங் அப்டேட்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ