சென்னை வில்லிவாக்கம் சேர்ந்த சரத்குமார் என்பவருக்கு வயது 30. இவர் பட்டப் பகலில் வில்லிவாக்கம் மேம்பாலம் அருகே இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்துகொண்டிருந்த போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த 7 மர்ம நபர்கள் அவரை வழிமறித்தனர். இவரை கொலை செய்ய வருவதை கண்டு ரவுடி சரத்குமார் அங்கிருந்து தப்பி ஓடினர். ஆனால் மர்மநபர்கள் துரத்தி ஓடி அவர்கள் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியால் சரமாரியாக தலை முகம் மார்பு ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பித்து ஓடினர். இதனை கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரவுடி ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட சம்பவம்


மேம்பாலம் அருகே பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் (Crime News) அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பரபரப்பாக காணப்படும் மார்க்கெட் பகுதியில் பட்டப்பகலில் இந்த சம்பவம் நடந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த ராஜமங்கலம் காவல் துறையினர் சம்பவ‌ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


காவல்துறையினர் வழக்கு பதிவு


படுகொலை நடந்த சம்பவ இடத்திற்கு வந்த கொளத்தூர் மாவட்ட காவல் துணை ஆணையாளர் பாண்டியராஜன் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைவில் பிடிக்க இரண்டு தனிப்படை அமைத்து பிடிக்க உத்தரவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ராஜமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆராய்ந்து சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றார். 


மேலும் படிக்க | 10th Exam Result: தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?



ஜானகிராமன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்


இறந்த சரத்குமார் மீது பெரவள்ளூர் காவல் நிலைய பகுதியில், 2019 ஆம் ஆண்டில் ஜானகிராமன் என்பவரை கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்டவர் என தெரியவந்தது. எனவே இந்த கொலை முன் விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என தெரிய வருகிறது.


மேலும் படிக்க | IMD ALERT: ஊட்டியில் இப்படியா? மக்கள் அதிர்ச்சி.. 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ