அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்த அவதூறு கருத்துக்களை வெளியிட சி.டி.நிர்மல்குமாருக்கு தடை!
செந்தில் பாலாஜி குறித்த அவதூறு கருத்துக்களை வெளியிட பாஜக-விலிருந்து அதிமுக-விற்கு மாறிய சி.டி.நிர்மல்குமாருக்கு தடை விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
டாஸ்மாக் மதுபான விற்பனை, கொள்முதல் உள்ளிட்டவை தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு கூறி தமிழக பாஜக-வின் ஐ.டி.பிரிவு தலைவராஜ நிர்மல் குமார் இருந்தபோது ட்விட்டரில் பதிவிட்டார். மேலும் நேர்காணல்களும் அளித்திருந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தம்மை குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க நிர்மல்குமாருக்கு தடை விதிக்கக்கோரி செந்தபாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் படிக்க: கடல்சார் தொல் வாழ்வியலைத் தேடும் “யாத்திரை” -எழுத்தாளர் ஆர்என் ஜோ டி குருஸ்
இந்த மனு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், எந்த ஆதாரமும் இல்லாமல் அவதூறாக குற்றம்சாட்டப்படுவதாகவும், தன்னை பற்றிய அவதூறு கருத்துகளை நீக்கிவிட்டால், இந்த வழக்கை வாபஸ் பெற தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த நிர்மல்குமார் தரப்பு வழக்கறிஞர், முகாந்திரத்தின் அடிப்படையிலேயே சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்திருந்தார். இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி, அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்த அவதூறு கருத்துக்களை வெளியிட சி.டி.நிர்மல்குமாருக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், நிர்மல்குமார் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை நீக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | இனி ஆன்லைனில் ரம்மி விளையாடினால்.. இவ்வளவு தண்டனையா? ஜாக்கிரதை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ