கடலூரில் ஆண் நண்பருடன் இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பள்ளி மாணவியை கடத்திய டான்ஸ் மாஸ்டர் போக்சோவில் கைது..!


கடலூரை அடுத்த  மஞ்சக்குப்பத்தில் உள்ள  தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் குண்டு உப்பலவாடி பகுதியைச் சேர்ந்த இளைஞர் இவர் தன்னுடன் வேலை செய்யும் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது. ஒரே நிறுவனத்தில் வேலை செய்வதால், வேலை முடிந்து ஒன்றாக தான் பைக்கில் வீடு திரும்புவார்கள். இந்நிலையில் அவர் நேற்று வேலை முடிந்த பிறகு தனது பைக்கில் காதலியை அழைத்துக் கொண்டு பேருந்து நிலையத்தில் விடுவதற்காக கம்மியம் பேட்டை இணைப்பு சாலையில் சென்றுள்ளார். 



அப்போது அரிஸ்டோ பள்ளி அருகே பயன்பாட்டுக்கு இல்லாத வீட்டின் அருகே இவர்கள் பேசியபடி இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இரு நபர்கள் அவர்களை மிரட்டி நகை, செல்போனையும் பிடிங்கியுள்ளனர். பொருட்களை திருடிய பின்பு, அதில் ஒரு நபர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி உள்ளார். மேலும் வன்கொடுமை செய்தவருடன் இருந்தவர்கள் அந்த சம்பவத்துக்கு துணை நின்றுள்ளனர். அதோடு காதலனை மிரட்டி அவர்கள் பிடித்துக்கொண்டதாக கூறப்படுகின்றது. பாலியல் வன்கொடுமை செய்த பிறகு அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதில் காயம் அடைந்த அப்பெண் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 


மேலும் படிக்க | மோஜ் பார்த்த தங்கை : அண்ணன் கண்டித்ததால் தற்கொலை..!


இது குறித்த பாதிக்கப்பட்ட இளம்பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சதிஷ், ஆரிப் மற்றும் ஒரு சிறுவன் உட்பட  3 பேரை கைது செய்துள்ளனர்.  அவர்களிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR