தமிழகத்தில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டில் காலம் காலமாக நடைமுறையில் இருந்து வந்த 8-ஆம் வகுப்பு வரையிலான கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து செய்வதற்கும், 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கும் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும், பொதுதேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு இரண்டு மாதத்தில் மறுதேர்வு நடத்தப்படும் என தமிழ அரசு சமீபத்தில் அறிவித்தது. 


தமிழக அரசின் இந்த அறிவிப்பிற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர் செங்கோட்டையன், "11,12-ஆம் வகுப்புகளுக்கு 6 பாடங்களில் 5-ஆக குறைக்க முதல்வருக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு விரைவில் சீருடைகள், காலணிகள் வழங்கப்படும்


5, 8-ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும். பொதுதேர்வு திட்டத்தை பொறுத்தவரை மத்திய அரசிடன் 3 ஆண்டு விலக்கு கேட்கப்பட்டுள்ளது." என தெரிவித்துள்ளார்.