நமது அண்டை மாநிலமான கேரளா மற்றும் கா்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களுக்குவெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமகா கேரளா மற்றும் கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. கேரளாவை பொருத்த வரை அங்கு உள்ள மொத்த அணைகளில் கிட்டத்தட்ட 25 அணைகள் நிரப்பி உள்ளதால், அணைகளில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோரத்தில் இருந்த கிராமங்கள் மூழ்கி உள்ளன. 50,000 மேற்ப்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர். அதேபோல கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால், அங்கு உள்ள அணைகள் நிரம்பும் நிலையில், கிருஷ்ண ராஜசாகா் மற்றும் கபினி அணைகளில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஒரு லட்சத்துக்கு அதிகமான கனஅடி அளவில் நீா் திறந்து விடபடுவதால், தமிழகத்திற்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.


இதனால் தமிழகத்தின் காவேரி கரையோரத்தில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகை என மொத்தம் ஒன்பது மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது மத்திய நீா்வள ஆணையம்.


காவேரி கரையோரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்கமாறு அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.