பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள், வேலைக்குச் செல்லும் இளம் பெண்கள், குடும்ப பெண்கள் என நேரிலும் முகநூலிலும் பழகி நட்பாக ஆசைவலையில் விழவைத்து, நம்பவைத்து ஏமாற்றி தனியாக அழைத்து சென்று அவர்களை அடித்தும் துன்புறுத்தியும் கதறக்கதற பாலியல் வன்கொடுமை செய்து நாசமாக்கி, அந்த சம்பவத்தை காணொளியாக எடுத்து, அதைக்கொண்டு அவர்களை மிரட்டி பணம் பறித்ததுடன், மீண்டும் பாலியல் வன்புணர்வுக்கு கட்டாயப்படுத்தி வந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையும் ஏற்ப்படுத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுக்குறித்து பாதிக்கப்பட்டவர் போலீசாரிடம் புகார் கொடுத்தும் சரியானா நடவடிக்கை எடுக்கவில்லை. காரணம், இந்த சம்பவத்துக்கு பின்னணியில் பெரிய அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் இருப்பதால், ஆரம்பத்தில் போலீசாரும் பெரிதாக நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக உட்பட சில கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் தந்து வந்தது.


பின்னர் இந்த கொடூர சம்பவம் சமூக வலைத்தளம் மூலமாகவும், நக்கீரன் பத்திரிக்கை மூலமாகவும் வெளிச்சத்துக்கு வந்தது. இதனையடுத்து இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமான சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் என 4 குற்றவாளிகளை கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது.


பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டது. தற்போது இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


இந்தநிலையில், எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் பொதுவெளியில் பத்திரிகை மற்றும் இணையதளம் மூலமாக அவதூறான கருத்துக்களை நக்கீரன் ஆசிரியர் கோபால் பரப்பி வருவதாகக் கூறி கோபால் மீது புகார் அளிக்கப்பட்டது. 


இதையடுத்து கடந்த 15 ஆம் தேதி நக்கீரன் கோபாலுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பினர். ஆன்லஆனால் நக்கீரன் கோபாலுக்கு ஆஜராகவில்லை. இதை அடுத்து மீண்டும் சிபிசிஐடி போலீசார் நக்கீரன் கோபாலுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். அதில் வரும் 25 ஆம் தேதி கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் எனக்கூறப்பட்டு உள்ளது.