அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 1 ஆம் தேதி இரவு புயலாக மாறியது. இதற்கு, ‘புரெவி’ (Cyclone Burevi) என்று பெயரிடப்பட்ட அந்தப் புயல், நேற்று முன்தினம் இரவு இலங்கை திரிகோணமலையில் கரையை கடந்தது. இதியாயடுத்து, மன்னார் வளைகுடா பகுதியில் பாம்பனுக்கு அருகில் நிலை கொண்டிருந்தது.


இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை பாம்பன் - கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது. இதன் காரணமாக, முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று பொது விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு (TN Govt) அறிவித்துள்ளது.


ALSO READ | Cyclone Burevi: தீவில் சிக்கித் தவித்த 3 மீனவர்களை மீட்டது கடலோர காவல்படை  


இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., "வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த “புரெவி புயல்” 3 ஆம் தேதி, மன்னார் வளைகுடா பகுதியில், பாம்பனுக்கு அருகில் நிலைகொண்டுள்ளது. இந்தப்புயல், 4 ஆம் தேதி (இன்று) அதிகாலையில் பாம்பன் - கன்னியாகுமரிக்கு இடையே, தென்தமிழக கடற்கரையை கடக்கக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது.


அவ்வாறு புயல் கரையை கடக்கும்போது, பெரும் மழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புகள் உள்ளன என்பதால், முன்எச்சரிக்கை நடவடிக்கையாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு 4 ஆம் தேதி (இன்று) அரசு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்கு ஈடாக 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் செயல்படும். மேற்கூறிய மாவட்டங்களில், அத்தியாவசிய பணிகள் தவிர, பிற பணிகளுக்கு பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.