டிசம்பர் 21 ஆர்.கே.நகர் தொகுதிக்கு பொது விடுமுறை?
டிசம்பர் 21-ம் தேதி நடக்க இருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை யொட்டி அந்த தொகுதிக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 21-ம் தேதி நடக்க இருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை யொட்டி அந்த தொகுதிக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி காலியானதையடுத்து. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்த புகாரின் பேரில் தேர்தல் கமிஷன் தேர்தலை நிறுத்தியது.
இப்போது மீண்டும் டிசம்பர் 21ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 27ம் தேதி தொடங்கியது. நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது.
இந்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தலையொட்டி, தேர்தல் நடைபெறும் அந்தத் தொகுதிக்குப் பொது விடுமுறை (டிசம்பர் 21) அளிக்க அரசு முடிவெடுத்துள்ளதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.