சென்னை: ஜெயலலிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா ஏற்றுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சசிகலா தலைமையை ஏற்க மறுத்து அதிருப்தியுடன் உள்ள அதிமுக நிர்வாகிகள் தற்போது ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை ஆதரிக்கத்தொடங்கி உள்ளனர்.


ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை பார்க்க அனுமதிக் கப்படாத தால் தீபா பரபரப்பு குற்றச் சாட்டுக்களை வெளியிட்டார். ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை வெளியிட வேண்டும் என்றுக தீபா வலியுறுத்தி வருகிறார்.


தீபாவை பார்ப்பதற்காக அதிமுக வினர் வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு தினமும் வந்த வண்ணம் உள்ளனர். நேற்று கடலூர், வேலூர், சேலம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தீபா வீட்டிற்க்கு முன்பு திரண்டு வாழ்த்தி கோஷமிட்டனர்.


ஜெயலலிதாவின் ரத்த சொந்தம் என்பதால் நீங்கள் தான் அதிமுக-வை வழி நடத்த வேண்டும் என்றும் அவர்கள் குரல் எழுப்பினார்கள். 


தொண்டர்களின் வாழ்த்து கோஷத்தால் மனம் நெகிழ்ந்த தீபா நேற்றும் இன்றும் தனது வீட்டின் மாடியில் உள்ள பால்கனிக்கு வந்து தொண்டர்களைப் பார்த்தார்.


அதிமுக தொண்டர்களின் தொடர் ஆதரவு காரணமாக தீபா தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார். 


இது தொடர் பாக அவர் கூறியதாவது:-


உங்கள் வாழ்த்துக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல முடிவை விரைவில் நான் அறிவிப்பேன்.


அரசியலில் குதிப்பது பற்றி இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் எனது முடிவு என்ன என்பது தெரிந்துவிடும்.


ஜெயலலிதாவுக்கு அளிக் கப்பட்ட சிகிச்சை விபரங்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும். அதற்காகத்தான் நான் காத்துக்கொண்டிருக்கிறேன். மேலும் அரசியலில் ஈடுபடுவது பற்றி ஓரிரு வாரங்களில் தெளிவாக சொல்லிவிடுவேன். இவ்வாறு தீபா கூறினார்.