சென்னை: தீபாவளி பண்டிகை (Diwali 2020) அன்று தமிழகத்தில் எப்பொழுது பட்டாசு வெடிக்க வேண்டும் என்பதற்கான நேரத்தை அதிமுக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று நோய் மற்றும் காற்று மாசு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், "இந்த வருட தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் போல் காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.


வரும் 14 ஆம் தேதி அன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை (Deepavali 2020) வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது பட்டாசு வெடிப்பது தான். தீபாவளி பண்டிகை நாள் வருவதற்கு சில நாட்களுக்கு முன்பே சிலர் பட்டாசுகளை வெடிக்க ஆரம்பிக்கிறார்கள். மேலும் தீபாவளி அன்று நாள் முழுவதும் பலர் பட்டாசு வெடிப்பது வழக்கம். 


ALSO READ |  ஒரு கிலோ இனிப்பு 9000 ரூபாய்! இந்த மிட்டாயில் அப்படி என்ன சிறப்பு?


ஆனால் தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பது வழக்கமுறை என்றாலும், அதேநேரத்தில் சுற்றுச்சூழல் மாசு குறித்தும் அக்கறை இருக்க வேண்டும். ஒருநாள் கொண்டாட்டத்திற்காக நம்மை சுற்றி இருக்கும் காற்றின் தரத்தை மோசமடைய வைப்பது, நாம்து உடல் நலத்திற்கு தான் கேடு. இதனால் தான் இயற்கை ஆர்வலர்கள் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது நமது கலாச்சாரம், அதை எப்படி நிறுத்துவது எனப்பலர் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். 


இதனையடுத்து இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தை அடைந்தது. நாட்டில் பட்டாசு வெடிப்பதை தடை செய்ய வேண்டும் என கடந்த 2018 ஆம் ஆண்டு பொது நல வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தீபாவளி நாளில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதித்தது. அதாவது காலை 1 மணி நேரமும், இரவு 1 மணி நேரமும் என மொத்தம் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும், மற்ற நேரத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை என்று தீர்ப்பு வழங்கியது.


இதற்கு எதிப்பு தெரிவித்து தமிழக அரசு (TN Govt) கடந்த 2018-ம் ஆண்டு மேல்முறையீடு செய்தது. ஆனால், தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். அந்த வருடம் முதல் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR