வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கிழ் ரூபாய் 52-கோடியில் வேலூர் புதிய பேருந்து நிலையத்தை முழுமையாக இடிந்துவிட்டு புதுபிக்கப்பட்டது.  புதுபிக்கப்பட்ட பேருந்து நிலையத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் திறந்து வைத்தார். இந்த பேருந்து  நிலையத்தில் 85-கடைகள் கட்டப்பட்டு ஏலம் விடுவதில் அரசியல் ரீதியாக பல பிரச்சனைகளை மாநகராட்சி நிர்வாகம் சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் 3 முறை ஏலம் விட முடியாமல் பொது ஏலம் தள்ளிப் போய் கடைகள் ஏலம் விட முடியாமல் அப்படியே இருக்கிறது.  இந்த நிலையில், இதற்கு முன்னதாக பேருந்து நிலையத்தில் கடை வைத்திருந்த வியாபாரிகள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்த நிலையில், பனீர்செல்வம், உசேனி, செளந்தர் ஆகிய வியபாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் மாநகராட்சி 4-வது மண்டலத்தில் முன்னுரிமை அளிக்கப்பட 3- வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்குவதுக்கு குலுக்கல் நடைபெற்றது. இதில், 3 பேரும் குலுக்கலில் கடைகள் தேர்வு செய்தனர். ஆனால், 3-பேருக்கும் பேருந்து நிலைய மேல் தளத்திலேயே 41, 42, 49, ஆகிய கடைகளின் எண் வந்துள்ளது.  இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் அந்த குலுக்கல் பெட்டியில் அனைத்து கடைகளின் விவரங்களும் சீட்டில் எழுதிப் போடவில்லை என்றும், மேல் தளத்தில் உள்ள கடைகள் விவரம் மட்டுமே குலுக்கல் சீட்டில் எழுதி போட்டுள்ளதாகவும், இந்த குலுக்கல் முறைகேடாக நடந்ததாகவும் கூறி அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கேயே தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர்.


மேலும் படிக்க | கல்லூரி பேருந்தில் Rugged Girl-க்கும் ஆசிரியைக்கும் நடந்த மோதல்! வைரலாகும் வீடியோ!


இதனால் அதிகாரிகளுக்கும், 3-வியபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.  பின்னர் அவர்கள் குலுக்கல் முறையில் முறைகேடு நடந்திருப்பதாக போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் மனு அளித்தனர். ஆனால் அங்கு புகார் பெறதா நிலையில் செய்வது அறியாமல் திகைத்து நின்றனர்.  இதுகுறித்து வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், ஐகோர்ட்டில் அப்பில் செய்து முன்னுரிமை பெற்று வந்தோம். மேல் தள கடைக்கு ரூ.5 லட்சம் டெபாசிட் கட்ட வேண்டும். தரை தளத்துக்கு ரூ.10 லட்சம் கட்டணும். நாங்கள் ரூ.10 லட்சத்துக்கு டெபாசிட் தொகை கட்டிவிட்டோம்.  ஆனால், வேண்டும் என்றே குலுக்கல் பெட்டியில் கிழ் தள கடைகளுக் கான எண்ணை மட்டுமே போட்டிருக்க வேண்டும்.


பெட்டியை திறந்து மற்ற சீட்டுகளை காட்டுங்கள் என்றால் காட்ட மறுத்து விட்டு, குலுக்கல் முடிந்தது, முடிந்ததுதான் என்று கூறிவிட்டு அதிகாரிகள் சென்று விட்டனர்.  குலுக்களில் உதவி கமிஷனர்  இருக்க வேண்டும் ஆனால் அவர் வர வில்லை. உதவி வருவாய் அலுவலர்களான குமரவேல், தனசேகர் ஆகியோர் தான் பங்கேற்றனர்.  எங்களுக்கு கடைகள் ஒதுக்கக் கூடாது என்ற எண்ணத்தில் அதிகாரிகள் இப்படி செய்கிறார்கள் என்றனர். இதுகுறித்து நாம் விசாரித்த போது, புதிய பேருந்து நிலைய கடைகள் ஏலம் விடுவதில் அதிகாரிகளுக்கு '' திமுக எம்.எல்.ஏ கள் முதற்கொண்டு மாநகராட்சி கவுன்சிலர்கள் வரை தரைதள கடைகள் கேட்டு பிரஷர் கொடுப்பதாகவும், உள்ளாட்சி தேர்தலில் வேலூர் மாநகராட்சி 60 வாடுகளின் கவுன்சிலர்களும் தலா 1 கடைகள் கேட்டு பிரஷர் கொடுப்பதாகவும் இதனாலேயே 3- முறை ஏலம் தள்ளி போனதாகவும், மேலும் ஐகோர்ட்டு மூலம் முன்னுரிமை பெற்ற வியாபாரிகளுக்கு மேல் தளத்தில் கடைகள் ஒதுக்க வேண்டும் எனவும் பிரஷர் கொடுத்ததால் வேறு வழியின்றி சிக்கல்களில் சிக்கிக்கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் அவஸ்தை படுவதாக மாநகராட்சி அதிகாரிகளே சிலர் தெரிவித்தனர்."


மேலும் படிக்க | அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் முருகர் தேர் வெள்ளோட்டம்: பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ