அரசு ஊழியர் 2வது திருமணம் செய்தால் துறை ரீதியான நடவடிக்கை: HC
அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்ததாக புகார் எழுந்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!!
அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்ததாக புகார் எழுந்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!!
அரசுப்பணிகளில் இருப்பவர்கள் 2வது திருமணம் செய்துகொண்டால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க நிர்வாகத்துறை செயலருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த தேன்மொழி என்பவர் கணவரின் ஒய்வூதிய பலன் கோரி மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவில், கணவரின் ஒய்வூதிய பலன் கோரி 2வது மனைவி தாக்கல் செய்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், அரசுப்பணிகளில் இருப்பவர்கள் 2வது திருமணம் செய்துகொண்டால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வூதிய பரிந்துரைக்கு வரும் ஆவணங்களை முறையாக சரிபார்த்து ஒப்புதல் வழங்கவேண்டும்.
மனுதாரரின் கணவர் ஒரு காவல் அதிகாரி. ஆனால், 2வது திருமணம் செய்துகொள்வது குற்றம் என தெரிந்துகொண்டே தவறு செய்துள்ளார். இரண்டு திருமணங்களை புரிவது நன்னடத்தை ஆகாது; அது குற்றமும் கூட. எனவே, அரசுப்பணிகளில் இருப்பவர்கள் முதல் மனைவி இருக்கும் போது 2வது திருமணம் செய்துகொண்டால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், தேவைப்படும் பட்சத்தில் குற்ற வழக்குப் பதிவு செய்ய பரிசீலனை செய்யவும் உத்தரவிட்டார்.