நாளை சூரசம்ஹார நிகழ்சி முருகன் ஆலயங்களில் வழக்கம் போல பக்தி சிரத்தையுடன் கொண்டாடப்படும். வழக்கமாக தீபாவளிக்கு அடுத்த நாள் தொடங்கி ஆறு நாட்களும் முருகனின் ஆலயங்களில் கந்தசஷ்டி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதிலும், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆண்டு கொரொனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடைபெறும் சமய நிகழ்வுகளில் பொதுமக்கள் கலந்துக் கொள்ள அனுமதியில்லை என்பதால், முருகனின் அறுபடை வீடுகளிலும் நாளை நடைபெறவிருக்கும் சூரசம்ஹாரம் மற்றும் அதையடுத்து நடைபெறவிருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சியிலும் கலந்துக் கொள்ள பக்தர்களுக்கு அனுமதியில்லை என கோவில் நிர்வாகங்கள் தெரிவித்து வருகின்றன.


சூரசம்ஹார நிகழ்ச்சிப் பற்றி பழனி முருகன் கோவில் நிர்வாகமும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பழனி முருகன் கோவிலில் நாளை நடைபெற உள்ள சூரசம்ஹார நிகழ்ச்சி மற்றும் 10 தேதி நடைபெற உள்ள திருக்கல்யாண நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் வலைதளத்தில் பக்தர்கள் சூரசம்ஹார  நிகழ்ச்சியைக் காண கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளதாக கோவில் இணை ஆணையர் அறிவித்துள்ளார்.


Also Read | சூரசம்ஹாரத்தில் முருகனுக்கு காணிக்கை 270 gm தங்கச் செயின்  


இந்த அறிவிப்பில் திண்டுக்கல் மாவட்டம், பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் எதிர்வரும் 03.11.2021 அன்று மாலை சுமார் 6.00 மணியாவில் நடைபெற உள்ள சூரசம்ஹார நிகழ்ச்சி மற்றும் 10.1712021 அன்று காலை 9.30 மணி முதல் 10.30) மணி வரையிலும் மலைக்கோயிலில் நடைபெற உள்ள திருக்கல்யாணம் மற்றும் அன்று மாலை 6.30 முதல் 7.30 மணி வரை அருள்மிகு பெரியநாயகியம்மன் திருக்கோயிலில் நடைபெற உள்ள திருக்கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு கோவிட் 12 அரசின் நிலையான இயக்க நெறிமுறைகளின் படி பொது மக்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும், 10-11-2021 அன்று, நண்பகல் 12.30 மணிக்கு பின்னர்தான் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்றும், எனவே மேற்படி நிகழ்ச்சிகளை இத்திருக்கோயில் நிர்வாகம் நேரலையாக வலைதளங்களில் ஒளிபரப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


www.palanimurugan.lirceti.gov.in (Website) என்ற வலைதள முகவரியிலும், வலையொளி (Youtube) https://www.youtube.com/channel/UCsKipsELEPixNmar2.LZkAxW  என்ற முகவரியிலும் மற்றும் முகநூல் (facebook) https://www.facebook.com/Arulmigu Dhandayuthapani-Swamy. |Temple-Palani-111431050544508ஆகியவற்றில் ஒளிபரப்பு செய்யவுள்ளது. பக்தர்கள் பொதுமக்கள் மேற்காணும் கந்தசஷ்டி திருவிழாவினை நேரலையில் கண்டுகளித்து பழனியாண்டவரின் அருள் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Also Read | பழநி முருகன்-பூம்பாறை வேலப்பர் நவபாஷண சிலைகளின் வித்தியாசம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR