நானே கட்சியை வழி நடத்துவேன் ஆகஸ்ட் 5-ம் தேதி ஆலோசனை!!
அதிமுக இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதற்காக கட்சியில் இருந்து விலகி இருந்த அதிமுக கட்சியின் துணை போதுச்செயலாளர் தினகரன், இனி கட்சியை நான் வழி நடத்துவேன். இதனால் அனைத்து மாவட்ட நிர்வாகிகளை வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சந்தித்து பேச உள்ளதாக அறிவித்துள்ளார்.
அதிமுக,3 அணிகளாக பிரிந்துள்ள நிலையில், தினகரனின் இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக அதுமுக-வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.