திண்டுக்கல்லில் பயங்கரம்! பெண் தலையை வீட்டு வாசலில் வீசிய கொலையாளிகள்
கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி, திண்டுக்கல்லை சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனராக இருந்த பசுபதி பாண்டியன் என்பவர் அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார்.
திண்டுக்கல்லில் பட்ட பகலில் நடந்த கொலை சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் பெண் ஒருவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டிருப்பது, அங்கு வாழும் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் கொலையாளிகள் அவரது தலையை வெட்டி, வீட்டு வாசலில் வீசி விட்டு சென்றுள்ளனர்.
கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி, திண்டுக்கல்லை சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனராக இருந்த பசுபதி பாண்டியன் என்பவர் அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணை திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான நந்தவனப்பட்டி பகுதியைச் சேர்ந்த 60 வயது நிர்மலா என்பவரை, நேற்று (செப்டெம்பர், 22) அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தலையை மட்டும் வெட்டி எடுத்துச் சென்று பசுபதி பாண்டியன் வீட்டில் போட்டு விட்டுச் சென்றுவிட்டனர்.
ALSO READ | Domestic violence:பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தந்தையை கொன்ற மகள்
100 நாள் வேலை திட்டத்தில், கால்வாய் தூர் வரும் பண்ணிக்காக சென்ற நிர்மலா, மோட்டார் சைக்கிளில் வந்த கொலையாளிகள், பொதுவில், சராமாரியாக வெட்டியுள்ளனர். பலத்த வெட்டுகள் விழுந்ததால் நிர்மலா நிலைகுலைந்து கீழே சரிந்து விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். ஆனால் ஆத்திரம் தீராத அந்த மர்ம நபர்கள், அப்போது துடிதுடிக்க நிர்மலாவின் தலையை துண்டித்ததில், நிர்மலா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். துண்டித்த தலையை எடுத்து சென்று, முன்னதாக கொலை செய்யப்பட்ட பசுபதி பாண்டியனின் வீட்டி வாசலில் கொலையாளிகள் வீசினர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திண்டுக்கல் போலீசார் நிர்மலா தேவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நிர்மலாதேவியின் தலையையும் எடுத்துச் சென்றனர். பசுபதி பாண்டியன் கொலை தொடர்பாக பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 5 பேரை தேடி வருகின்றனர். படுகொலை செய்யப்பட்ட நிர்மலாவின் கணவர் பெருமாள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். நிர்மலாவுக்கு சரவணக்குமார், கார்த்திகேயன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில் சரவணக்குமார் என்பவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | சாப்பாடு போட மறுத்த தாயை கத்தியால் குத்திக் கொன்ற கொடூர மகன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR