திண்டுக்கல்லில் இருந்து வேளாங்கண்ணிக்கு நேரடி சிறப்பு ரயில் வரும் பிப்ரவரி 2ல் முதல் மார்ச் 23ம் தேதி  வரை இயக்கப்பட உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு ஏராளமான பக்தர்களும், பயணிகளும் சென்று வருகின்றனர். ஆனால் இங்கு செல்ல நேரடி ரயில் வசதி இல்லை. இதனால் குடும்பம் மற்றும் குழுவாக செல்பவர்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் தென்னக ரயில்வேக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.


இந்நிலையில் வாரவிடுமுறைகளில் வேளாங்கண்ணிக்கு வாராந்திர சிறப்பு ரயில்(06093) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் ஒவ்வொரு சனிக்கிழமையும் நாகர்கோயிலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலி, மதுரை வழியே திண்டுக்கல்லிற்கு இரவு 10:10க்கு வருகிறது. பின்பு ஞாயிறு அதிகாலை 3:30க்கு வேளாங்கண்ணிக்குச் சென்றடையும். 


மறுமார்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து இந்த ரயில் (06094) செவ்வாய் இரவு 8:15க்கு  கிளம்பி திண்டுக்கல்லை நள்ளிரவு 1:25க்கு கடந்து புதன் காலை 7:55க்கு நாகர்கோவிலை வந்தடையும். இந்த ரயிலில் குளிர்சாதன பெட்டி இரண்டு, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி ஆறு, முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் நான்கு, மாற்றுத் திறனாளிகள் மற்றும் சரக்குப்பெட்டிகள் இரண்டு என்று 14 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.