காவல்துறையை பெருமைப்படுத்தி ஐந்த திரைப்படம் எடுத்ததற்கு இன்று வேதனைப்படுவதாக இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான தனது ‘சாமி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானர் இயக்குநர் ஹரி. சாத்தான்குளம் விவகாரத்தை அடுத்து காவல்துறையை பெருமைபடுத்தி ஐந்த திரைப்படம் எடுத்ததற்கு இன்று வேதனைப்படுவதாக தெரிவித்துள்ளார்.


READ | பாதுகாவலர்கள் ஒடுக்கு முறையாளர்களாக மாறுவது கொடூரமான குற்றம்: நீதி வேண்டும் ராகுல்...


ஜூன் 28 தேதியிட்ட மற்றும் கையெழுத்திட்ட தனது கடிதத்தில், சாத்தான்குளத்தில் நடந்த கொடூரத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த எந்த நபரும் இனி உட்படுத்தக்கூடாது என்று வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிடுகையில்., “சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிடக்கூடாது... சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே... காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்த துறையையே இன்று களங்கப்படுத்தியுள்ளது. காவல்துறையை பெருமைப்படுத்தி ஐந்து படம் எடுத்ததற்காக இன்று மிக மிக வேதனைப்படுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.



நாட்டு மக்களை உலுக்கிய சாத்தான்குளம் தந்தை மற்றும் மகன் (ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ்) காவல்நிலைய இறப்பு, தமிழகத்தில் பெரும் சீற்றம் ஏற்பட்டதை அடுத்து ஹரியின் அறிக்கை வந்துள்ளது. சாத்தான்குளம் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இருவரும் காவல்துறையின் மிருகத்தனத்திற்கும் சித்திரவதைக்கும் உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது, மற்றும் இது அவர்களின் மரணத்திற்கு வழிவகுத்ததாக கூறப்படுகிறது. 


பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றாலும், ஊடகங்களில் நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் பொதுமக்களின் கோபத்திற்கு வழிவகுத்துள்ளன.


இயக்குநர் ஹரி, காவல்துறையை பெருமைப்படுத்தும் விதமாக இதுவரை ஐந்து படங்களை உருவாக்கியுள்ளார், அவை அனைத்தும் காவல்துறை என்கவுண்டர்களை நியாயப்படுத்துகின்றன மற்றும் பொலிஸ் வன்முறையை மகிமைப்படுத்துகின்றன. இந்நிலையில் தனது படைப்பிற்கு தற்போது வேதனை படுவதாக இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார்.


READ | போலீஸ் காவலில் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்திற்கு DMK சார்பில் 25 லட்சம் நிதியுதவி!!


தனது கடிதத்தில், இயக்குனர் இரண்டு சாமி படங்களை குறிப்பிடுகிறார் - சாமி மற்றும் சாமி ஸ்கொயர் (15 ஆண்டுகள் இடைவெளியில் தயாரிக்கப்பட்ட படங்கள்) மற்றும் சூரியாவின் நடிப்பில் உருவான சிங்கம், சிங்கம் II மற்றும் சிங்கம் III ஆகிய மூன்று சிங்கம் படங்களையும் இதில் குறிப்பிட்டுள்ளார்.


காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள சக்தியையும், குற்றங்களை கட்டுக்குள் வைத்திருக்க வன்முறையின் அவசியத்தையும் மகிமைப்படுத்தும் முன்னணி கதாபாத்திரங்கள் பஞ்ச் உரையாடல்களுடன் விரிவான செயல் காட்சிகளை இந்த திரைப்படங்கள் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.