கடந்த நவம்பர் 11 ஆம் தேதியன்று ஓசூர் காவல்நிலையத்தில் அளித்த சங்கர் என்பவர் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் எனது சகோதரர் நந்தீஷ் மற்றும் அவரது மனைவி சுவாதி இருவரும் உறவினர் வீட்டுக்குச் செல்வதாக கூறி சென்றனர். ஆனால் கடந்த சில தினங்களாக அவர்களை காணவில்லை. இருவரும் இதுவரை வீடு திரும்பவில்லை. அவர்களுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை என்று புகாரில் கூறினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சங்கரின் புகாரை அடுத்து காவல் துறை வழக்கு பதிவு செய்து, விசாரித்து வந்தது. கடந்த நவம்பர் 13 ஆம் தேதி அழுகிய நிலையில் நந்தீஷின் உடலையும் அடுத்து இரண்டு நாளில் சுவாதியின் உடலையும் காவல் துறையினர் மீட்டனர். 


மாற்று சமுதயத்தை சார்ந்த இருவர் திருமணம் செய்ததால், ஆத்திரமுற்ற சுவாதியின் உறவினர்கள தம்பதிகளை கடத்திச்சென்று ஆணவக்கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு பலர் வேதனைகளையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.


இதுக்குறித்து கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் "பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இது போன்ற காண்டுமிராண்டி தனத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனக் கூறியுள்ளார்.


கொடுமையின் உச்சம்... ராஜலட்சுமி மற்றும் இப்போது நந்தீஷ்-சுவாதி..... பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் மனிதத் தன்மையற்ற சாதி காட்டுமிராண்டிகளுக்கு முடிவு இல்லாமல் உள்ளது. இதற்க்கு முடிவு கொண்டு வரவேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும்... அதற்காக வழியை கண்டுபிடிக்க வேண்டும்


இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.