கோவை: கோவை மாநகராட்சி 97வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் நிவேதா தொடர்ந்து மூன்று மாநகராட்சி கூட்டங்களில் கலந்து கொள்ளாததை அடுத்து தகுதி இழக்கிறார். மாநகராட்சி மாமன்ற கூட்டங்கள், மாநகராட்சி நிர்வாக அறிவிப்பின்படி நடைபெறும். இதில் தொடர்ந்து மூன்று கூட்டங்களில் பங்கேற்கவில்லை எனில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 பிரிவு 32(1)இன் படி உள்ளாட்சி பதவி பறிபோகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிறகு அடுத்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 பிரிவு 32(4) இன் படி சம்பந்தப்பட்ட நபர் கூட்டங்களில் பங்கேற்காதது குறித்து காரணம் ஏதாவது தெரிவித்து இருந்தால் மாநகராட்சி ஆணையாளர் அதனை வெளியிடுவார். அக்காரணத்தை தொடர்ந்து தகுதி இழந்தவர்கள் மீண்டும் தொடர்வது குறித்து மாமன்ற கூட்டம் முடிவு செய்யும். 


இந்நிலையில், தமிழ்நாட்டில் கோவை மாநகராட்சியில் 97வது வார்டு திமுக பெண் கவுன்சிலரான நிவேதா கடந்த ஜனவரி, மார்ச், மே ஆகிய மூன்று மாதங்களில் நடைபெற்ற கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்காததை தொடர்ந்து இன்று முதல் தகுதி இழக்கின்றார். 


மேலும் படிக்க | அழகு கொஞ்சும் பசுமை பள்ளத்தாக்கு! காஷ்மீரில் திரைப்பட சுற்றுலாவை மேம்படுத்த திட்டம்


இது குறித்து மாநகராட்சி தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டு, நிவேதா காரணம் ஏதாவது தெரிவித்தால் அதனை மாநகராட்சி ஆணையாளர் அடுத்த கூட்டத்தில்  வெளியிடுவார். அதனையடுத்து அவர் மீண்டும் பதவியில் தொடர்வது குறித்து மாமன்ற  கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். 


நிவேதா கோவை மாநகராட்சி மன்ற உறுப்பினர்களிலேயே இளம் பெண் மாமன்ற உறுப்பினர் என்பதும் முன்னாள் திமுக கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் மருதமலை சேனாதிபதியின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: ராகுல் காந்தி "தற்கால இந்திய அரசியலின் மிர் ஜாஃப்ர்" பாஜக புதிய சர்ச்சை


2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது, கர்நாடகாவில் நடைபெற்ற  தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக அவர் மீது சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டதும், அதன் தொடர்ச்சியாக, ராகுல் காந்தி குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது.


அதையடுத்து, ராகுல் காந்தி, பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதும், அவர் தனது அரசு வீட்டை காலி செய்ததும் அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற பதவி தகுதி நீக்க நடவடிக்கைகளில் முக்கியமானதாகும். 


தற்போது, காங்கிரஸ் கட்சியின் தோழமைக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் கவுன்சிலர் ஒருவர், பதவி நீக்கம் செய்யப்படும் விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


மேலும் படிக்க | வாட்ஸ்அப் வழியாக அரங்கேறும் புதுவகை மோசடி; தப்பிப்பது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ