இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் மாவட்ட நீதிபதிகள் ஆய்வு செய்து அறிக்கையினை அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் சுகாதாரம், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து அம்மாவட்ட நீதிபதிகள் ஆய்வு செய்து அறிக்கை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


முருகனின் அருபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் அடிப்படைக் கட்டமைப்புகள் கோரி தொடரப்பட்ட வழக்கில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது எனவும், பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவு வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.


இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் மாவட்ட நீதிபதிகள் ஆய்வு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.


இந்த ஆய்வில்.. கேயில்களில் குடிநீர், சுகாதாரம், பாதுகாப்பு, புராதனப் பொருட்கள் பாதுகாப்பு, கோவில் கட்டுமானங்கள் குறித்தும், மரங்கள் உள்ளதா?, பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளதா? கட்டண தரிசன முறையில் பாகுபாடு காட்டப்படுகிறதா? என்பன குறித்தும் ஆய்வு செய்யவேண்டும் எனுவம், வரும் 30-ஆம் தேதிக்குள் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.