சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,702  பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,95,935 ஆக அதிகரித்துள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 29 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 19,864 ஆக உள்ளது. இன்றுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34,639 ஆக அதிகரித்துள்ளது.


தமிழ்நாட்டில்  நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடும் போது இன்றைய தொற்று பாதிப்பு சற்றே குறைந்திருக்கிறது. கடந்த சில தினங்களாகவே நாட்டிலும், தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் மட்டுப்பட்டு வருகிறது.


Also Read | ஆகஸ்ட் 18: தமிழகத்தில் இன்று 1,797 பேருக்கு புதிதாக பாதிப்பு, 31 பேர் பலி


தமிழகத்தில் மாவட்ட அளவிலான கொரோனா பாதிப்பு பட்டியலில் கோவை முதலிடம் பிடித்துள்ளது. கோயம்பத்தூரில் 198 பேருக்கும், அதையடுத்து சென்னையில் 193 பேருக்கும் புதிதாக கொரோனா பாதித்துள்ளது., அதனையடுத்து அதிக பாதிப்பு பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்திருக்கும் ஈரோடு மாவட்டத்தில் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 147 ஆக உள்ளது. நான்காம் இடத்தில் தஞ்சாவூரும், ஐந்தாம் இடத்தில் செங்கல்பட்டு மாவட்டமும் இடம் பிடித்துள்ளன. 


கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடிப்பவை:


கோவை - 198
சென்னை - 193
ஈரோடு - 147
தஞ்சாவூர் - 112
செங்கல்பட்டு - 98



இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:


அரியலூர் 18
செங்கல்பட்டு 98
சென்னை 193
கோவை 198
கடலூர் 50
தர்மபுரி 26
திண்டுக்கல் 11
ஈரோடு 147
கள்ளக்குறிச்சி 27
காஞ்சிபுரம் 35
கன்னியாகுமரி 23
கரூர் 16
கிருஷ்ணகிரி 26
மதுரை 12
மயிலாடுதுறை 16
நாகப்பட்டினம் 38
நாமக்கல் 51
நீலகிரி 31
பெரம்பலூர் 7
புதுக்கோட்டை 31
ராமநாதபுரம் 3
ராணிப்பேட்டை 21
சேலம் 94
சிவகங்கை 21
தென்காசி 10
தஞ்சாவூர் 112
தேனி 9
திருப்பத்தூர் 5
திருவள்ளூர் 64
திருவண்ணாமலை 37
திருவாரூர் 35
தூத்துக்குடி 12
திருநெல்வேலி 17
திருப்பூர் 86
திருச்சி 55
வேலூர் 29
விழுப்புரம் 34
விருதுநகர் 4


 Also Read | Covid Compensation தொடர்பாக 4 வாரத்தில் முடிவெடுக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR