வேதா நிலையம் குறித்து தீபா தாக்கல் செய்த வழக்கு: இன்று விசாரணை
மறைந்த முதலமைச்சர் ஜே. ஜெயலலிதாவின் வேதா நிலையத்தைக் கையகப்படுத்தி அதை நினைவுச் சின்னமாக மாற்ற தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜே. ஜெயலலிதாவின் (J Jayalalitha) வேதா நிலையத்தைக் கையகப்படுத்தி அதை நினைவுச் சின்னமாக மாற்ற தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்த மனுவை விசாரிக்க ஒரு தனி நீதிபதி மறுப்பு தெரிவித்ததையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, இந்த வழக்கை, நீதிபதி வினீத் கோத்தாரி தலைமையிலான டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றினார். இந்த பெஞ்ச் இன்று வழக்கை விசாரிக்கவுள்ளது.
நீதிபதி என் ஆனந்த் வெங்கடேஷ், ஒரு சரியான அமர்வு மூலம் இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என இந்த விவகாரத்தை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்ததைத் தொடர்ந்து இந்த வழக்கு மாற்றப்பட்டது.
நிலம் கையகப்படுத்தும் சட்டம், 2013-ஐ சுட்டிக்காட்டிய தீபா (Deepa), ஒரு தனியார் நிலத்தை ஒரு நினைவுச்சின்னமாக மாற்றுவதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை என்று வாதிட்டார். வேதா நிலையத்தை (Veda Nilayam) கையகப்படுத்துவது தனது அத்தை மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனின் விசாரணையைத் தடுக்கும் என்றும் அவர் கூறினார்.
ALSO READ: பூர்வீக சொத்தை அரசு எடுத்துக்கொள்வதில் எங்களுக்கு உடன்பாடில்லை - J.தீபா
எனினும், இந்த கையகப்படுத்தலுக்கு எதிராக போயஸ் தோட்ட வாசிகள் போட்ட மனுவை தள்ளுபடி செய்த போதே, ஒரு நினைவுச்சின்னத்தை நிறுவுவது நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் வராது என்று கூறி தான் தான் ஏற்கனவே அந்த மனுவை தள்ளிவைத்து தீர்ப்பளித்ததாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.
இதேபோன்ற மனுவை தீபாவின் சகோதரர் தீபக் முன்வைத்துள்ளார். அது நீதிபதி என்.கிருபகரன் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன் உள்ளது.