தீபாவளி சலுகை மது இலவசம் - வானவில் பார்
தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் மதுக்கடை ஒன்றில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு மது இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூரில் வானவில் என்ற தனியார் மதுபான கடை உள்ளது. இந்த மதுபான கடையில் தீபாவளி சலுகையாக அறிவித்துள்ளது.10 குவாட்டர் வாங்கினால் ஒன்று இலவசம் என்றும், 10 பீர் வாங்கினால் ஒரு பீர் ஒன்று இலவசம் என்றும், 5 குவாட்டர் ஒரு கட்டிங் இலவசம் என்றும் அறிவித்துள்ளது. மேலும், 5 வகையான நொறுக்கு தீனிகள் எப்பொழுதும் இலவசம் என்றும் அந்த மதுபான கடை அறிவித்துள்ளது.
மேலும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.