காஞ்சிபுரம் அத்திவரதர் சுவாமி தரிசன நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று அரசுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., "காஞ்சிபுரம் அத்திவரதரை பொதுமக்களுக்கு தரிசிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டி அறிக்கை!


காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதரை பூஜை செய்து 48 நாட்கள் மக்கள் தரிசிப்பதற்காக பார்வைக்கு வைப்பது மக்களுக்கு மிகுந்த சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அத்திவரதரை தரிசிக்க பல்வேறு ஊர்களில் இருந்து வரும் பொதுமக்களுக்கு தரிசிக்கும் நேரத்தை அதிகரித்து, காணவரும் பக்தர்களுக்கு அனைத்து அத்தியாவசிய உதவிகளும், பாதுகாப்பும் தமிழக அரசாங்கம் செய்திட வேண்டும். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வு என்பதால் லட்சக்கணக்கான மக்கள் காஞ்சிபுரம் நோக்கி வருகிறார்கள், எனவே தரிசிக்க வரும் பொதுமக்களுக்கு எல்லா விதத்திலும் தமிழக அரசாங்கம் உதவி செய்திடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.


இதற்கிடையில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அத்திவரதர் உற்சவம் தரிசன நேரம் நிர்வாக காரணங்களால், அத்திவரதரை தரிசிக்கும் நேரம் இரவு 11 மணியில் இருந்து 9 மணி வரை குறைகப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.