Tamilnadu Latest News: சென்ணை எண்ணூரில் எண்ணெய் கழிவுகள் (Chennai Ennore Oil Spill) பாதிக்கப்பட்ட இடத்தை தேமுதிக பொதுச்செயலாளராக சமீபத்தில் பொறுப்பேற்ற பிரேமலதா இன்று (டிச. 16) ஆய்வு செய்தார். தொடர்ந்து, பிரேமலதா (Premalatha) செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்," எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆதரவாக இருப்போம். 2015ஆம் ஆண்டு இதே போன்று நடந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் தற்போது இருக்கும் மோசமான நிலை அப்போது கூட கிடையாது. பூண்டி ஏறி திறக்கும்போது எல்லா எண்ணெய் கழிவுகளையும் திறந்துவிட்டதன் விளைவு தற்போது பழவேற்காடு வரை இந்த எண்ணெய் கழிவுகள் படிந்துள்ளது.


ரூ. 5 லட்சம் நிவாரணம் வேண்டும்


வானவில் போல கடற்கரை பகுதியில் எண்ணெய் கழிவுகள் படிந்துள்ளதை பார்த்த போது மிகவும் கடினமாக உள்ளது. மத்திய அரசும் மாநில அரசும் 15 நாட்களாக என்ன நடவடிக்கை எடுத்தது. மத்திய மீன்வளத்துறை அமைச்சர் நேரடியாக இங்கு வந்து மக்களை சந்திக்க வேண்டும். மாநில மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இந்த பக்கம் கூட வரவில்லை. பழவேற்காடூ வரை 1000  படகுகள் எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது.


மிக்ஜாம் புயலால் (Michaung Cyclone) பாதிக்கப்பட்டவர்களுக்கு 6000 ஆயிரம் ரூபாய் தரும் முதலமைச்சர், இந்த எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயாயை மாநில அரசும் மத்திய அரசும் இணைந்து வழங்க வழிவகை செய்ய வேண்டும். இந்த பகுதியில் நோய் நொடியின்றி வாழ்ந்து வந்த மக்கள் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவத்திற்கு கூட வசதி இல்லாமல் உள்ளனர்.


மேலும் படிக்க | தமிழக சுகாதாரத்துறைக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கொடுத்திருக்கும் ரெட் அலெர்ட்..!


மத்திய அமைச்சர் இங்கு வர வேண்டும்


சிபிசிஎல் நிறுவனம் எண்ணையை திறந்து விடுவதற்கு யார் அனுமதி கொடுத்தது. ஏற்கனவே புயலால் பாதிக்கபட்ட மீனவர்களுக்கு இந்த எண்ணெய் கழிவுகளும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய, மாநில அரசுகள் மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மத்திய அமைச்சர் இங்கு வர செய்ய வேண்டும்


அண்ணாமலை (Annamalai) மூலமும், எங்களுக்கு தெரிந்த பாஜக தலைவர்கள் மூலம் இந்த செய்தியை மத்திய அரசிடம் கொண்டு செல்வோம். முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்திற்கு தான் சென்ற போது சீரமைப்பு பணி நடைபெறுவதாக கூறி என்னை திருப்பி அனுப்பினர்.


கேப்டன் முதலமைச்சராக இருந்திருந்தால்...


ஆனால் பிறந்தநாளுக்காக உதயநிதி (Udhayanidhi Stalin) சென்றபோது அனுமதிக்கபட்டார். நான் கலைஞர் பேத்தியாக இருந்திருந்தால் அனுமதித்திருப்பார்கள் போல. கேப்டனிடம் (விஜயகாந்திடம்) ஆட்சி இருந்தால் இந்நேரம் வேட்டியை மடிச்சு கட்டி கடலுக்குள் இறங்கியிருப்பார். அப்படியான கேப்டனை (முதலமைச்சராக) இழந்தது தமிழகம். தமிழக அரசு தரும் 6000 ஆயிரம் ரூபாயில் மிக்ஸி, கிரைண்டர், டிவி கூட வாங்க முடியாது.


போட்டோசூட் ஆட்சிதான் நடைபெறுகிறது. ஒருவாரத்திற்குள் உரிய நிவாரணம் மீனவர்களுக்கு கிடைக்கவில்லை என்றால் மிகப்பெரிய முற்றுகை போராட்டம் நடைபெறும். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் அண்ணாமலையிடம் உடனே நான் பேச இருக்கிறேன். ஒரு நாள் மழைக்கே சென்னை ஸ்தம்பித்துவிட்டது. ஒரே நாள் மழைக்கே சிங்கார சிங்கப்பூர் சென்னை நாசமாகி போய்விட்டது. 


திமுக தடுக்கிறது...


தேர்தலுக்கு முன் ஒரு நிலைபாடு தேர்தலுக்கு பின் ஒரு நிலைபாடு என்பதே திராவிட மாடல். தகுதி பார்த்து 1000 ரூபாய் வழங்கியதை போல ஏமாற்று வேலைதான் இந்த 6000 ரூபாய் நிவாரணமும். அனைத்து வித வரியையும் கட்டி கூட எந்த முன்னேற்றமும் இல்லை. தமிழகத்தில் அனைவரும் வசூல் மன்னர்கள்தான்" என்றார். 


தமிழ்நாட்டில் ஒரு பெண் ஆளுமை வளர்வதை திமுக தடுக்க நினைக்கிறதா? என்ற கேள்விக்கு,"நிச்சயமாக அரசியலில் பெண்ணின் முக்கியத்துவத்தை ஏற்க முடியாமல் தடுத்து நிறுத்தி இருக்கலாம்" என கூறினார். தொடர்ந்து பேசிய பிரேமலதா, "அப்பன் வீட்டு பணமா என்று பேசிய உதயநிதியின் பேச்சால் பாதிப்பு தான் ஏற்படும். கலைஞரும் அண்ணாவும் பொது தலைவர்கள் என்றுதான் பார்க்கிறோம். கலைஞருக்கு பேனா வைப்பதற்கு முக்கியதுவம் காட்டும் தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" என்றார். 


மேலும் படிக்க | திராவிடத்துக்குள் தான் ஆன்மீகம் இருக்கிறது - அமைச்சர் எ.வ.வேலு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ