அய்யா, அம்மா, தாயே... திமுகவும் பாஜகவும் கூட்டணி - சி.வி.சண்முகம் பேச்சால் பரபரப்பு
திமுகவும், பாஜகவும் கூட்டணி சேரப்போகிறார்கள் என அதிமுக ராஜ்யசபா உறுப்பினர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
நெய்வேலி என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி அதிமுக சார்பில் நெய்வேலி சுரங்கம் முன்பு என்எல்சி நிறுவனத்தை கண்டித்தும், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் தமிழக அரசுசைகண்டித்தும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம், “மத்திய பாஜக அரசு சொல்லுகின்ற பணிகளை வாயை மூடி தன் தலையில் தூக்கிவைத்து திமுக ஸ்டாலின் அரசு செய்து வருகிறது. குறிப்பாக என்எல்சி விவகாரத்தில் ஆண்டுக்கு 2 ஆயிரம் கோடி லாபம் ஈட்டுவதாக நிலங்களை உடனே கையபடுத்த மத்திய அரசு உத்திரவிட்டுள்ளது அதனை தமிழக அரசு செய்து வருகிறது.
தமிழகத்தில் திமுக அரசு மத்திய அரசை விமர்சித்து பேசுகிறார்கள். ஆனால் டெல்லி சென்றால் மத்திய அரசிடம் அய்யா அம்மா தாயே என கெஞ்சுகிறார்கள். 39 எம்.பி களும் பிச்சை எடுகிறார்கள். மத்திய அமைச்சர்களிடம் கெஞ்சுவது தான் திமுகவின் சமுகநீதி என விமர்சித்தார். மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக - பாஜக கூட்டணி வர உள்ளது. திமுகவுடன் கூட்டணி வைத்த கட்சிகள் ஓட போகிறார்கள் என தெரிவித்தார்.
மேலும் படிக்க | மாறாத அன்பு ; தீராத காதல் - மரணத்திலும் ஒன்றிணைந்த தம்பதிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ