பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தூத்துக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் சுமார் 60000 வாக்குகள் பின்தங்கியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

17-வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி மே 19-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவானது நடைபெற்றது.


இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படும் நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தின் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன.


தமிழகத்தை பொருத்தவரையில் திமுக - அதிமுக இடையே பலத்த போட்டி காணப்பட்டாலும், டிடிவி தினகரனின் அமமுக, சீமானின் நாம் தமிழர், நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் படையெடுப்பு வாக்கு சிதரல்களை ஏற்படுத்தி தேர்தல் கணிப்பில் பெரும் வித்தியாசத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தற்போது வெளியாகியுள்ள நிலவரப்படி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி தொகுதியில் திமுக-வின் கனிமொழி முன்னிலை பெற்றுள்ளார். தற்போதைய நிலவரப்படி அவர் 115671 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இரண்டாம் இடத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் 40374 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், சுயேட்சை வேட்பாளர் புவனேஷ்வரன் 22003 வாக்குகளுடன் 3-ஆம் இடத்திலும், நாம் தமிழர் கட்சியின் ராஜசேகர் 8539 வாக்குகளுடன் நான்காம் இடத்திலும் உள்ளனர். 


மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொன் குமரன் 4399 வாக்குகளுடன் 5-ஆம் இடத்தில் உள்ளார்.