11:24 19-03-2019
தனிநபர் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படும். 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

11:22 19-03-2019
வேளாண்துறைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.



11:22 19-03-2019
பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இலவச ரயில் பாஸ் வழங்ககப்படும்.



11:21 19-03-2019
மாணவர்களின் கல்விக்கடனை முழுமையான தள்ளுபடி செய்யப்படும்.



11:20 19-03-2019
தென்னிந்திய நதிகளை இணைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்



11:12 19-03-2019
தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியுட்ரினோ திட்டம் கைவிடப்படும்.



11:11 19-03-2019
ஓய்வுதியக்கார்கள் பெற்றிடும் ஓய்வுதியதுக்கு முழு வருமானவரி விலக்கு அளிக்கப்படும்.



11:10 19-03-2019
மக்களின் நலனுக்கு ஏற்ப ஜி.எஸ்.டி வரியில் மாற்றம் கொண்டுவரப்படும்



11:08 19-03-2019
நெசவாளர்களின் வாழ்வாதரத்தை உயர்த்த இலவச மின்சாரம் வழங்கப்படும்



11:06 19-03-2019
10 வகுப்பு வரை படித்த 1 கோடி பேருக்கு சாலை பணியாளர்கள் பணி வழங்கப்படும்.



11:04 19-03-2019
கிராமப்புற பெண்களுக்கு தொழில் தொடங்க ரூ. 50,000 வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்



11:03 19-03-2019
மதுரை, திருச்சி, கோவை, சேலம் போன்ற பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும்.



10:58 19-03-2019
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.



10:55 19-03-2019
மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கல்வித்துறையை கொண்டு வரப்படும். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.




10:53 19-03-2019
சிலிண்டர் விலை குறைக்கப்படும். சிலிண்டருக்கு மானியம் வாங்கப்படாது. மானியம் நிறுத்தப்படும்



10:53 19-03-2019
தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முறை ரத்து செய்யப்படும்.



10:52 19-03-2019
மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும்.



10:51 19-03-2019
தமிழ்நாட்டில் தமிழை இணை ஆட்சி மொழியாக அங்கீகரிக்க சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும்



10:50 19-03-2019
பாஜகவின் மத்திய அரசால் நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. 



நாளை முதல் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் திமுக கட்சியினர் ஈடுபட உள்ளதால், இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களவை தேர்தல், இடைத்தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வாசித்து வருகிறார்.