அர்ஜூனா விருது பெறும் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் அவர்களுக்கு திமுக தலைவர் MK ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2018-ம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதன்படி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு இருவருக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 


அதேவேலையில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் அவர்களுக்கும் அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டது. 


இந்தநிலையில் அர்ஜூனா விருது பெறும் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் அவர்களுக்கு திமுக தலைவர் MK ஸ்டாலின்  பாராட்டுகளை தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...



"அர்ஜூனா விருது பெறும் தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் @sathiyantt அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகள்! ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே தன் இலக்காக கொண்டிருக்கும் சத்யன், தொடர்ந்து பல்வேறு சாதனைகள் புரிந்து நாட்டிற்கு பெருமை சேர்த்திட வேண்டுமென மனதார வாழ்த்துகிறேன்!" என குறிப்பிட்டுள்ளார்!