உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பிய திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அவர்களை திமுக தலைவர் MK ஸ்டாலின் நேரில் சந்தித்தார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திமுக பொதுச்செயலாளராக பதவி வகித்து வருபவர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள். உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வரும் இவர் சமீப காலமாக கட்சியின் முக்கிய கூட்டங்களில் பங்கேற்காமல் இருந்து வந்தார்.


இந்நிலையில், கடந்த அக்டோபர் 20-ஆம் நாள் இரவு அன்பழகன் அவர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை அண்ணாசாலையில் உள்ள கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அன்பழகன் அவர்களை திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார். இந்த அறிவிப்பின்படி “பொதுச்செயலாளர் பேராசிரியர் காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை மேற் கொள்ளப்பட்டு வருவதால் உடல்நலம் தேறி நலமுடன் இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


இரண்டொரு நாட்களில் உடல்நலம் தேறி இல்லம் திரும்ப இருப்பதால் கழக நிர்வாகிகள்-தோழர்கள் எவரும் நேரில் வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என குறிப்பிட்டு இருந்தார்.


இதனையடுத்து தற்போது பொதுச்செயலாளர் அன்பழகன் அவர்கள் வீடு திரும்பி இருப்பதாகவும், அவரை திமுக தலைவர் முக ஸ்டாலின் நேரில் சந்தித்ததாகவும் திமுக கழக அறிவிப்பு தெரிவிக்கின்றது. இந்த சந்திப்பின்போது முக ஸ்டாலின் அர்களுடன் எ.வ.வேலு M.L.A., அவர்கள் உடன் இருந்தார் என திமுக கழக செய்திகுறிப்பு தெரிவிக்கின்றது