தந்தை பெரியார் சிலைக்கு முக ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!
தந்தை பெரியாரின் 140-வது பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் சிலைக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்!
தந்தை பெரியாரின் 140-வது பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் சிலைக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்!
சமூக புரட்சியாளர் தந்தை பெரியாரின் 140-வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா சாலை, சிம்சன் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சில் திமுக பொதுச்செயலாளர் க அன்பழகன் அவர்களும் பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பகுத்தறிவுப் பகலவன் என்று போற்றப்படும் தந்தை பெரியார் அவர்களின் 140-வது பிறந்த நாள் விழா இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. பெரியார் என்று அனைவராலும் அறியப்படும் ஈ.வெ.இராமசாமி அவர்கள் செப்டம்பர் 17,1879-ஆம் நாள் வெங்கட்ட நாயக்கர் நாயுடு, முத்தம்மாள் தம்பதியருக்கு மகனாய் தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார்.
சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடிய இவர் தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தார்.
தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் இவரது பெயரை உச்சரிக்காமல் கட்சி நடத்துவது இயலாத ஒன்று. நாட்டு மக்களை தமிழகத்தில் பக்கம் திரும்பவைத்த தலைவர்களின் பெயர்களில் இவருக்கு முன்னுறிமை உண்டு.
இத்தகைய தலைவரின் பிறந்தநாளினை அனைத்து கட்சி தலைவர்களும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இன்று அண்ணா சாலை, சிம்சன் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்!