சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நாளை காலை 9 மணிக்கு, திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும் எனவும் துரைமுருகன் (Durai Murugan) கேட்டுக்கொண்டு உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கூட்டத்தில் திருச்சியில் நடைபெற உள்ள திமுக (Dravida Munnetra Kazhagam) பொதுக்கூட்டம் குறித்து விவாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் (Assembly Elections) நடைபெற உள்ளது. அதேபோல ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஐந்து மாநிலங்களில் பாதிவாகும் வாக்கு எண்ணிக்கை மே 2 அன்று நடைபெறும்.  


ALSO READ |  இதுவரை திமுக தரப்பில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன


234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், அனைத்து கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவாரத்தை மற்றும் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.



திமுக தரப்பில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு (Indian Union Muslim League) மூன்று இடங்களையும், இரண்டு தொகுதிகளை மனிதநேய மக்கள் கட்சிக்கும் (Manithaneya Makkal Katchi) ஒதுக்கியிருந்தது. தற்போது திமுக கூட்டணியில் அங்கம் வசிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு (Viduthalai Chiruthaigal Katchi) ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. 


சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு (Pattali Makkal Katchi) 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


ALSO READ |  TN Assembly Elections 2021: திமுக கூட்டணியில் முதல் ஒப்பந்தம் கையெழுத்தானது


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR