சென்னையில் நவம்பர் 10 ஆம் தேதி திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் வருடத்துக்கு ஒருமுறை பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பது விதியாகும். அதன் அடிப்படையில் தி.மு.க. பொதுக்குழுவை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 6 ஆம் தேதி கூட்டுவதாக பொதுச்செயலாளர் க.அன்பழகன் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார். ஆனால், அந்த சமயத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்ததால் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.


இப்போது மீண்டும் பொதுக்குழுவை கூட்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. வருகிற 10 ஆம் தேதி தி.மு.க. பொதுக்குழு கூட்டம் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நவம்பர் 10 ஆம் தேதி காலை 10 மணிக்கு  ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். 


இது குறித்து திமுக பொதுச்செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட திமுக பொதுக்குழுக் கூட்டம், வருகிற நபம்பர் 10 ஆம் தேதி அன்று காலை 10 மையளவில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் உள்ள அரங்கில் நடைபெறும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.