சென்னை: முதல்முறையாக மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட பொது பட்ஜெட்டை இன்று (ஆகஸ்ட் 13) தாக்கல் செய்தது. நாளைக்கு (சனிக்கிழமையன்று)  வேளாண்மைத் துறைக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் குறித்து தமிழக ஆளுநரால் அறிவிக்கப்பட்டது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் (Banwarilal Purohit) ஜூன் மாதம் 16 வது சட்டசபையின் முதல் அமர்வில் உரையாற்றி போது இதைத்தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் முதல் முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டசபையில் தாக்கல் செய்வார்.


ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய திமுக அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் தனி விவசாய வரவு செலவுத் திட்டமும் (Agriculture Budget) ஒன்றாகும். சனிக்கிழமையன்று, கர்நாடகா (Karnataka) மற்றும் ஆந்திராவுக்குப் (Andhra Pradesh) பிறகு, தமிழ்நாடு தனி விவசாய வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்யும் மூன்றாவது மாநிலமாக மாறும்.


விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய தொழில்நுட்பங்கள், புதிய சாகுபடி முறைகள் மற்றும் விவசாயிகளின் உற்பத்தியாளர் குழுக்கள், உழவர் நலச் சங்கங்கள் மற்றும் வல்லுநர்களின் பங்களிப்புடன் விவசாயத்தை நவீனமயமாக்குதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பது தான் இந்த  வேளாண்துறை பட்ஜெட்டின் நோக்கமாக உள்ளது.


ALSO READ | TN Budget 2021: மகளிருக்கு பலன் அளிக்கும் திட்டங்கள்; முழு விபரம்..!!


"விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க, கால்நடை வளர்ப்பு, இயற்கை வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களை வளர்ப்பது போன்ற தொடர்புடைய நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படும். வேளாண் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் மற்றும் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் விவசாயத்திற்கான தனி ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையின் போது தெரிவித்திருந்தார். 


மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் (M Karunanidhi) நிறுவப்பட்ட உழவர் சந்தை (Uzhavar Santhai) மீண்டும் புத்துயிர் பெறுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் எனவும் ஆளுநர் தனது உரையில் வலியுறுத்தி இருந்தார். பட்ஜெட் இதுபோன்ற பல சந்தைகளை மாநிலத்தில் நிறுவ முயற்சிக்கும்.


தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் (Tamil Nadu Legislative Assembly) ஆகஸ்ட் 13 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 21 வரை நடைபெறும்.


இன்று தமிழக அரசு பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (P. T. R. Palanivel Thiagarajan) தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் நிதி முறைகேட்டை குறித்த ஒரு வெள்ளை அறிக்கையை நேற்று வெளியிட்டார்.


ALSO READ | TN Budget 2021-22: PTR பட்ஜெடட்டில் எந்த துறைக்கு எவ்வளவு ஓதிக்கீடு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR